Asianet News TamilAsianet News Tamil

குடிகாரய்ங்களா புலம்பாதீங்க... இங்கே தான் கம்மி... லட்சம் லட்சமாய் போட்டு ஆறுதல் சொல்லும் ஹெச்.ராஜா..!

போக்குவரத்து விதிகளை மீறுவோரை மடக்கி மடக்கிப் பிடித்து போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வரும் வேளையில் ஹெச்.ராஜா மற்ற நாட்டுடன் இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை ஒப்பிட்டு ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். 

H. Raja to console the drinkers
Author
Tamil Nadu, First Published Sep 6, 2019, 6:02 PM IST

போக்குவரத்து விதிகளை மீறுவோரை மடக்கி மடக்கிப் பிடித்து போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வரும் வேளையில் ஹெச்.ராஜா மற்ற நாட்டுடன் இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை ஒப்பிட்டு ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். H. Raja to console the drinkers

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், அதற்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதங்களை இந்தியாவுடன் மற்ற சில நாடுகளின் ஒப்பீடு... என்கிற முகப்புரையோடு,  இந்திய போக்குவரத்து அபராதம் அதிகம் என்று நீங்கள் நினைத்தால் மற்ற நாடுகளில் நீங்கள் என்ன செலுத்த வேண்டும் என்று பாருங்கள். H. Raja to console the drinkers

குடித்து விட்டு வாகன் ஓட்டினால், இந்தியாவில் மட்டும் தான் குறைவாக 10 ஆயிரம் ரூபாய் விதிக்கப்படுகிறது. ஹாங்காங்கில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 376 ரூபாயும், சிங்கப்பூரில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 77 ரூபாயும், பிரிட்டனில் 2 லட்சத்தும் 16 ஆயிரத்து 929 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. 

 

ஜெர்மனியில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 359 ரூபாயும், ஜப்பானில் 6 லட்சத்து 77 ஆயிரத்து 115 ரூபாயும், அமெரிக்காவில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 905 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக அவர் அந்தப் பட்டியலில் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios