ஆங்கிலேய கிறிஸ்துவ ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் தான் நீதிக்கட்சியும் திக,திமுகவும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ’’இந்த நாட்டிலுள்ள நம்முடைய மூதாதையர்கள் அனைவரையுமே கேவலபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஆங்கிலேய கிறிஸ்துவ ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் தான் நீதிக்கட்சியும் திக,திமுகவும். பெரியார் தலைமையில் திகவில் 1944ல் தீர்மானம் போடுகிறார்கள். அந்தத் தீர்மானத்தை அண்ணா கொண்டு வருகிறார்.

 

லண்டனில் இருந்து சென்னை ராஜதானியை வெள்ளையன் ஆள வேண்டும் என தீர்மானம் போட்ட துரோகிகள் தானே இவர்கள். பெருவுடையார் கோயிலில் என்ன மொழியில் பேச வேண்டும் எனக் கூறுவதில் என்ன அறுகதை இருக்கிறது? ஆண்டவனே இல்லை என்பீர்கள். இல்லாத ஆனடவனுக்கு என்ன மொழியில் மந்திரம் ஓதினால் என்ன? மதம் வேறு மொழி வேறு. கிறிஸ்தவ மதம் பல நாடுகளில் இருக்கிறது. அங்கு பல மொழிகளில் பேசுகிறார்கள். 

அதேபோல இஸ்லாம் 58 நாடுகளில் இருக்கிறது. அவர்கள் பல்வேறு மொழிகளில் பேசுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் தமிழர்கள், ஆந்திரத்தில் தெலுங்கர்கள்,  வங்கத்தில் வங்காளிகள், குஜராத்தில் குஜராத்திகள் பேசுகிறார்கள். இஸ்லாமியர்கள் நமாஸ் செய்வது எந்த மொழியில் அரபு மொழியில் தானே. ஆகவே குஜராத்தில் இருப்பவர் மதம் இந்து. மொழி குஜராத்தி. வங்காளத்தில் இருப்பவரின் மதம் ஹிந்து. மொழி பெங்காலி. அதேபோல தமிழகத்தில் இருப்பவரின் மதம் இந்து. மொழி தமிழ். 

ஆகவே இந்து ஆகம விதிகளின் படித்தான் நாடு முழுவதும் நடக்கிறது.  ஆகையால் நாங்கள் தமிழ் ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை இல்லை. ஆண்டாளை கெட்ட வார்த்தையில் அர்ஜித்த வைரமுத்து எல்லாம் இதைப்பற்றி பேசக் கூடாது.  உங்களுக்கெல்லாம் இந்து கோயில்களில் எந்த மொழியில் மத்திரம் ஓதினால் என்ன? அதனை கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது?

 

மசூதிகளில் அரேபிய மொழியில் தான் நமாஸ் செய்யக்கூடாது என நாடு முழுவதும் போராட்டம் நடத்தினால் என்னவாகும்? ஆனால், நாங்கள் அப்படி போராட மாட்டோம். ஏனென்றால் நமக்கு சரியான புரிதல் இருக்கிறது. மதம் என்பது வேறு. மொழி என்பது வேறு’’என அவர் தெரிவித்துள்ளார்.