திமுக எம்.பி., தயாநிதிமாறன், மோடியையும், எடப்பாடி பழனிசாமியையும் பிச்சைக்காரர்கள் என கூறியதற்கு பாஜக தேசிய செயலாளர் ஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார். 

கொரோனா நேரத்தில் அமெரிக்க அரசும், ஏழை நாட்டின் அரசும் பொதுமக்களுக்கு தேவையான பொருள் உதவி, பண உதவிகளை தருகிறது. ஆனால் நம்மூரில் தான் பிரதமரும் முதலமைச்சரும் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுத்து வருகின்றார்கள். மக்களே ஏற்கனவே பிச்சை எடுத்து வரும் நிலையில் பிச்சை எடுத்து வரும் மக்களிடம் பிச்சை எடுக்கும் ஒரே அரசு இந்திய அரசு மட்டுமே என்று தயாநிதி மாறன் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. 

 

இந்த கீழ் தரமாக பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.  இந்திய மக்களையும், இந்திய பிரதமரையும் பிச்சைக்காரர்கள் என்பதா? எனக்கூறி டுவிட்டரில் #பிச்சைக்காரன்_தயாநிதி என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரண்ட்  செய்தனர். இந்நிலையில், இந்து அமைப்புகளின் சார்பில் கோவை பெரியகடை வீதி போலீசிலும், தமிழ்நாடு விஎச்பி சார்பில் சூலூர் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் ஊரடங்கு முடிவுக்கு பிறகு விசாரித்து விரைவில் வழக்குப்பதிவு செய்ய உள்ளனர். 

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதி உண்டியல் வசூல் செய்யும் பழைய புகைப்படத்தை பதிவிட்டு, தயாநிதியின் தாத்தா பிச்சை எடுத்தபோது என கருத்து தெரிவித்து பகிர்ந்துள்ளார். இந்தப்பதிவுக்கும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.