Asianet News TamilAsianet News Tamil

"கால்டுவெல்-க்கு பிறகுதான் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் மோதல் உருவானதாம்" - கிறிஸ்தவர்களை வம்புக்கிழுக்கும் ஹெச். ராஜா!!

h raja talks about tamil and sanskrit
h raja talks about tamil and sanskrit
Author
First Published Jul 24, 2017, 3:52 PM IST


''கால்டுவெல் அடியொற்றிகள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ் மொழியே கற்காமல் மருத்துவராக, பொறியாளராக ஒருவர் பட்டம் பெற முடியும் என்ற நிலைமை தமிழகத்தில் உருவாகியுள்ளது'' என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் மோதல் இருந்ததில்லை என்றும், ஆங்கிலேய பாதிரி கால்டுவெல் இந்தியா வந்த பிறகுதான் செயற்கையான மோதல் உருவாக்கப்பட்டதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.

ஹெச். ராஜா, இது குறித்து பேசுகையில், இல.கணேசன் நடத்திவரும் பொற்றாமரை அமைப்பின் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அதில் பதினென்கீழ் கணக்கு இலக்கியம் பற்றி பேராசிரியர் ஞானசுந்தரம் பேசினார். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழும் சமஸ்கிருதமும் எவ்வாறு இணைந்தே இருந்துள்ளது என்பது எடுத்துக்காட்டியுள்ளார்.

பதினென்கீழ் கணக்கிலுள்ள இலக்கியங்களின் பெயரே இவ்விரு மொழிகளையும் தாங்கியுள்ளதாக கூறினார். உதாரணமாக திரிகடிகம் என்பது த்ரிணி அதாவது மூன்று என்பதாகும்.

h raja talks about tamil and sanskrit

நான்மணிக்கடிகை என்பதில் நான் மட்டுமே தமிழ். அதேபோல சிறுபஞ்சமூலம், இதில் சிறு என்பது மட்டுமே தமிழ். ஏலாதி என்பதில் ஏல தமிழ், ஆதி சமஸ்கிருதம் என்று சுட்டிக்காட்டிய ஹெச் ராஜா, தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் மோதல் இருந்ததில்லை என்றும், தமிழ் இலக்கியங்களிலும் தமிழ் அறிஞர்கள் மத்தியிலும் மோதல் இருந்ததில்லை. 

இந்த இரு மொழிகளும் ரயில் தண்டவாளத்தைப் போன்றே இணைந்து போற்றப்பட்டு வந்துள்ளது. மிகப்பெரிய தமிழ் அறிஞரான டி.என். ராமசந்திரன் சமஸ்கிருதம் தேவ பாஷை. தமிழ் மகா தேவபாஷை என்று கூறுவார்.

ஆனால் மதம் மற்றும் ஏஜென்ட் ஆங்கிலேய பாதிரி கால்டுவெல் இந்தியாவுக்கு வந்த பிறகுதான், இந்த செயற்கையான மோதல் உருவாக்கப்பட்டதாக ஹெச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

பிற மொழிகளை வெறுப்பது தமிழ் மொழிப்பற்றாகாது. கால்டுவெல் அடியொற்றிகள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ் மொழியே கற்காமல் மருத்துவராகவும், இன்ஜினியராகவும் ஒருவர் பட்டம் பெற முடியும் என்ற நிலை தமிழகத்தில் உருவானது என்றும் பிற மொழி வெறுப்பு தாய்மொழி பற்றாகாது என்றும் ஹெச். ராஜா கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios