Asianet News TamilAsianet News Tamil

நடிகர் சூர்யா வன்முறையத் தூண்டுகிறார்... பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா விமர்சனம்!

நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஏற்கனவே நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். புதிய வரைவுக் கொள்கை பற்றி பல கேள்விகளை முன் வைத்து இதையெல்லாம் நாம் ஏன் பேசுவதில்லை. 

H. Raja slams actor Surya
Author
Usilampatti, First Published Jul 14, 2019, 10:03 PM IST

புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா விமர்சனம் தெரிவித்துள்ளார்.H. Raja slams actor Surya
  அகரம் அறக்கட்டளை சார்பில் ஏழை,எளிய மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் பலர் பங்கேற்று பேசினார்கள். இறுதியா இந்த விழாவில் பேசிய இறுதியாகப் பேசிய நடிகர் சூர்யா, புதிய தேசிய கல்வி குறித்து விமர்சனம் செய்தார்.

H. Raja slams actor Surya
அந்த விழாவில் சூர்யா, “30 கோடி மாணவர்களின் எதிர்காலத்திற்கானது இந்த புதிய கல்விக் கொள்கை. ஆனால், அதைப்பற்றி பெரிய அளவில் விவாதங்கள் எழுப்பப்படவில்லை என்பதை அறியும்போது வருத்தம் ஏற்படுகிறது. நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஏற்கனவே நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். புதிய வரைவுக் கொள்கை பற்றி பல கேள்விகளை முன் வைத்து இதையெல்லாம் நாம் ஏன் பேசுவதில்லை. இந்த விவகாரத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் ஒன்று சேர வேண்டும். இல்லையெனில் மொத்தமாக அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் இருண்டு போய்விடும்” என சூர்யா புதிய தேசிய கொள்கை குறித்து விமர்சனம் செய்தார். H. Raja slams actor Surya
 நடிகர் சூர்யாவின் பேச்சு பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் கவனம் ஈர்த்தது. இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வந்திருந்தார். அப்போது நடிகர் சூர்யாவின் பேச்சு குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஹெச். ராஜா, “புதிய தேசியக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையத் தூண்டும் வகையில் உள்ளது. தேசிய கொள்கை குறித்து 400 பக்க வரைவை அவர் படித்து பார்த்தாரா என்று தெரியவில்லை. அதை முழுவையாகப் படித்து பார்த்துவிட்டு சூர்யா பேச வேண்டும்.” என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios