h raja says that bjp is like a rock

கால்நடை வர்த்தகத்தில் சீர்திருத்தம் கொண்டு வருவதாகக் கூறி மத்திய அரசு புகுத்தியுள்ள புதிய நடைமுறை, நாடு முழுவதும் போராட்ட விதையை ஆழமாக நட்டியுள்ளது. 

தான் என்ன? உண்ண வேண்டும் என்பதை மத்திய அரசு தீர்மானிக்க முடியாது என்று கூறி முதல் ஆளாக போராட்டத்தில் குதித்துள்ளது நமது அண்டை மாநிலமான கேரளம். 

தேவைப்பட்டால் மத்திய அரசின் இந்த உத்தரவை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றவும் தயார் என்று மெடுக்குடன் கூறி அதிரச் செய்திருக்கிறார்.

ஆனால் தமிழக அரசோ மருந்துக்கு கூட ஒரு கண்டன அறிக்கையை வெளியிடாமல் மெளனம் சாதித்து வருகிறது. ஆனால் இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ள தமிழக எதிர்க்கட்சிகள், மத்திய அரசை வகை தொகையில்லாமல் விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred



மாட்டிறைச்சி மீதான தடை வன்மத்தோடு எடுக்கப்பட்டதா?அல்லது கால்நடைகள் வதைபடுவதை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டதா என்ற விவாதங்கள் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா எதிர்க்கட்சிகள் மீது மிகக் காட்டமான கண்டனங்களை முன்வைத்துள்ளார். 

பா.ஜ.க.வும் பறையும் ஒன்னு - இத அறியாதவ வாயில மண்ணு என்பதைப் போல அமைந்திருக்கிறது ஹெச்.ராஜாவின் சுளீரென சுட்டுத் தள்ளுகிறது இப்பேட்டி..ராசிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின மாடுகள், பசுக்களைக் காப்பாற்றவே மாட்டிறைச்சி மத்திய அரசு தடைவிதித்திருப்பதாகக் கூறினார்.