குண்டர்களை கொண்டு தாக்கி ரத்தக்களறி ஆக்கிய ரத்தக் காட்டேரிகள் இவர்கள் என தயாநிதிமாறனை கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’2004ல் ஸ்டார் விஜயில் வாரிசு அரசியல் குறித்து விவாதம். கோபிநாத், டாக்டர் மகன் டாக்டர் ஆவது தவறா?  எனக் கேள்வி கேட்டார். நான், ‘’டாக்டருக்கு படித்தால் ஆகலாம். ஆனால் தயாநிதிமாறன் தகப்பனார் இறந்ததால் அதே தொகுதியில் எம்.பி.,உடனே கேபினட் அமைச்சர் என்பது வாரிசு அரசியல்’’என்றேன். அடுத்த 24 மணி நேரத்தில் நியூஸ் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கலாம். ஆனால், பேட்டியில் ஒருவர் கூறிய கருத்திற்காக அத்தொலைகாட்சியின் உரிமத்தை ரத்து செய்தது எப்படி நியாயம்? அதுமட்டுமல்ல. அந்த நெறியாளரிடம் என்னைப்பற்றி இவர் உபயோகித்த வன்முறை வார்த்தைகள் அகம்பாவத்தின் உச்சக்கட்டம்.

பிச்சைக்காரர் மறுவாழ்வு நிதி பரிசுச் சீட்டு வெளியிட்டு அதையும் ஆட்டைய போட்ட கூட்டம் இந்திய மக்களை, பிரதமரை பிச்சைக்காரர்கள் என்பதா? 

 

கதை கேளு, கதை கேளு, மாறன்கள் கதை கேளு. போட்டியாளர்களை நசுக்கி வளர்ந்த கூட்டம். சென்னையில் எஸ்.சி.வி.க்கு போட்டியாக இருந்த ஹேத் வே பணியாளர்களை குண்டர்களை கொண்டு தாக்கி ரத்தக்களறி ஆக்கிய ரத்தக் காட்டேரிகள் இவர்கள். இவர்களுக்கு போட்டியாக யாரும் வர முடியாது’’ என அவர் தெரிவித்துள்ளார்.