இந்தியாவில் 50 கோடி பேரை சாகடிக்க இலக்கு வைத்துள்ளதாக மாற்று மதத்தினர் பேசிய வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி கிளப்பியுள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. 

நோய்க்கு மதம் இல்லை. ஆனால் இவருக்கு மதம் பிடித்துள்ளதா இல்லையா? இந்தியாவில் 50 கோடி பேர் சாக வேண்டுமாம் இஸ்லாமியர் ஒருவர் பேசிய வீடியோவை வெளியிட்டிருந்தார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.

இதற்கு கருத்து தெரிவித்து இருந்த சிலர் இந்த உருது மொழி உங்களுக்குத் தெரியுமா? எப்படி அவர் பேசியது உங்களுக்கு தெரியும் எனக் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதிலளித்த ஹெச்.ராஜா, ‘’அது உருது அல்ல வங்காளி. ஆமாம். உங்களுக்கு புரியலைனா கொல்கத்தா போய் வங்காளியில் பேசிய ஸ்டாலினிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்’’ எனப் பதில் அளித்திருந்தார்.

அது வங்காளி அல்ல. பெங்காளி எனத் தெரிவித்து இருந்தார். அதற்கு விளக்கமளித்த ஹெச்.ராஜா, வ, ப  என எப்படி வேண்டுமானாலும் மாற்றி உபயோகிக்கலாம். தமிழ் இலக்கணம் படிங்க. வில்லர்கள, பில்லர்கள், இரண்டும் ஒன்றே. 10 வகுப்பு பாடம்’’ எனத்தெவித்து இருந்தார்.

உங்களுக்கு எப்படி வங்காளம் தெரியும் என ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள ஹெச்.ராஜா, ‘’நான் 1980-84 மத்தியப் பிரதேசத்தில் coal india ல் பணியாற்றினேன். அது தேசிய உண்மை ஆக்கப்படுமுன் பெங்கால் கோல் ஃபீல்டு ஆக இருந்தது. எனவே நிறைய பெங்காலிகள் மத்தியில் 4 ஆண்டுகள் வசித்ததால் எனத் தெரிவித்த அவர், தனது பூர்வீகத்தை கேள்வி எழுப்பியவருக்கும் இப்படி பதில் அளித்துள்ளார்.

 

’’இந்த மாதிரி காமெண்ட்ஸ் பார்த்து சலித்துப் போச்சு தம்பி. நான் சுத்த சுயம்பிரகாச தமிழன் இங்க உள்ள பல திக, திமுக காரர்களைவிட. தஞ்சாவூர் அகரமாங்குடி சொந்த ஊர், பிறந்தது பக்கத்திலுள்ள மெலட்டூர். எனது பாட்டனார் பெயர் சிவ சிதம்பரம் இப்பெயர் தமிழகத்திற்கு வெளியில் இருக்காது. புரிந்ததா’’ எனக்கேட்டுள்ளார்.