நேற்று பட்ஜெட் அறிவிப்பு வெளியானதை அடுத்து  கருத்து கூறிய வைகோ, "அறிவித்த பட்ஜெட், விதிமுறைகளை மீறி வீடு வீட்டுக்கு பணம் கொடுத்து ஓட்டு கேட்பதற்கு நிகரான மோசடியானது என்றும், நாடு முழுவதும் 130 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெறுவதுடன், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது" என்று கருத்து சொல்லி இருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை விருகம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா  "முதலில் பிரதமர் மோடியை பற்றி பேச வைகோவுக்கு என்ன தகுதி இருக்கிறது? வைகோவால் கலிங்கப்பட்டியில் அவருடைய வார்டு கவுன்சிலராக ஆக முடியுமா? டெல்லியில் போய் பேசுவதால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேசிய தலைவராக ஆக முடியுமா?" என பகிரங்கமாக அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். 

எச்.ராஜாவின் இந்த கேள்வியால் பதில் சொல்ல முடியாமல் திணறி வருகிறாராம் வைகோ.

இதனைத் தொடர்ந்து சிதம்பரம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர் , "பாஜக ஆட்சிக்கு வந்தபோது கஜானா காலியாக இருந்தது. தற்போதுள்ள ஆட்சி பல கோடி வாரா கடன்களை வரவைத்துள்ளது. சிதம்பரம் அடிக்கடி சிபிஐ நீதிமன்றத்திற்கு சென்று வருவதால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவரை மன்னித்துவிடலாம் என்று நக்கலடித்துள்ளார்.