புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் போலீஸ் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. அது மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அழைக்கப்பட்டு இருந்தார். 

அப்போது அந்த இடத்தில் மேடை அமைக்க போலீசார் அனுமதி மறுத்ததால் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போலீசாருடன் வாக்குவாதம் செயந்தார் அவர் வாக்குவாதம் செய்த அடுத்த நிமிடமே வைரலாக பரவியது . அந்த வீடியோவில் நீதிமன்றத்தையும் காவலர்களையும் அடுமையாக தாக்கிப் பேசியிருந்தார்.

"

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள எச்.ராஜா ''அந்த வீடியோவில் இருப்பது என் குரல் இல்லை. யாரோ என்னை போல பேசி இருக்கிறார்கள். நான் அதை பேசவில்லை'' என்று வைரல் வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார்.  அவர் நான்  காவல், நீதித்துறைகளை மிரட்டும் படி  பேசவில்லை. யாரோ நான் பேசியது போல வெளிவந்துள்ள வீடியோ எடிட் செய்யப்பட்டது. 

யாரோ வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள். எனக்கு எதிராக செயல்படும்  யாரோ இதை  திட்டமிட்டுள்ளனர். எச்.ராஜா சர்ச்சைக்கு உரிய விஷயங்களை பேசிவிட்டு பின் அதில் இருந்து பின் வாங்குவது புதிய விஷயம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டிவிட்டரில் கருத்துகளை பதிவிட்டுவிட்டு அது நான் இல்லை, என்னுட அட்மின் பேசியது இது என்று கூறி எஸ்கேப்ல்  ஆன நிலையில் இந்த முறை. நான் அவன் இல்லை அது என் குரலே இல்லை என்று கூறியுள்ளார்.