h raja criticizes farmers protest in delhi
டெல்லியில் விவசாயிகள் நடத்து போராட்டமா? குரங்கு வித்தையா? என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கிண்டல் செய்துள்ளார்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள நேர்காணலில், “டெல்லியில் போராட்டம் நடத்துபவர்கள், எலியை கடிப்பது, பாம்பை கடிப்பது, அம்மணமாக செல்வது, சேலைக் கட்டிக்கொள்வது, மோடியை போன்று முகமூடி அணிந்துகொண்டு சவுக்கால் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நான் கேட்கிறேன். இவர்கள் நடத்துவது போராட்டமா அல்லது குரங்கு வித்தையா? போராட்டத்திற்கு தலைமை தாங்கும் அய்யாக்கண்ணு விவசாயியே கிடையாது.
தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுச்சாமி கூட, தமிழக விவசாயிகளை கேவலப்படுத்தும் அய்யாக்கண்ணுக்கு ஒருபோதும் ஆதரவு கொடுக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இவர் தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவராக உள்ளார். ஆனால், நதிகளை ஒருபோதும் இணைக்க முடியாது என்று கூறிய ராகுல் காந்தியுடன் அவர் தோள் போட்டுக் கொள்கிறார்.
