வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் சமூகவலைதளவாசிகள் ரஜினியை வீதிக்கு வாருங்கள் என அழைத்து வருகின்றனர்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேசினார் ரஜினி. அப்போது ’குடியுரிமைச் சட்டத் திருத்தமோ, தேசிய குடிமக்கள் பதிவேடோ இஸ்லாமியர்களைப் பாதிக்காது. இஸ்லாமியர்களுக்கு பிரச்சினை என்றால் முதல் குரல் இந்த ரஜினிகாந்தின் குரலாகத்தான் இருக்கும்’ எனப் பேசினார். 

அதனை மனதில் வைத்து வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் தாக்கட்டதை வைத்து  ‘இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பதாக சொன்னீர்களே... இப்போது எங்கே இருக்கிறீர்கள் ரஜினி. #வீதிக்குவாங்க_ரஜினி..! என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். #போராடவா_ரஜினி_தாத்தா என்கிற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி இருக்கின்றனர்.