இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குருதாஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகள் வகித்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்.

இவர், ஏஐடியுசி பொதுச்செயலாளர், மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். 

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வசித்து வந்த குருதாஸ் தாஸ்குப்தா, இருதயம் மற்றும் சிறுநீரக கோளாறு மற்றும் முதுமைசார்ந்த நோய்களால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். 

அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் காலமானார்.

அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். குருதாஸ் தாஸ்குப்தா மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.