கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்யுள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசியல் தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்பி.க்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவால் தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ மற்றும் எம்.பி. உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து,  கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.  இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கே.எஸ்.விஜயகுமார் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதனையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் கொரோனா தொற்று காலத்திலும் தொகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்குவது, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, பொதுநிகழ்ச்சிளில் பங்கேற்பது என தீவிரமாக இருந்தாலும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது என அரசின் விதிமுறைகளை பின்பற்றி வந்தார். இதற்கு முன் இவர் 5 முறை கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.