Gujarat voters taught Rahul Gandhi the importance of visiting temples Yogi Adityanath
ராகுல் காந்தி கோயிலுக்கு செல்வது குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கிண்டல் செய்துள்ளார்.
Add Asianetnews Tamil as a Preferred Source

குஜராத் மாநிலச் சட்டசபைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிகிறது. கடைசி நாளான நேற்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அகமதாபாத் நகரில் உள்ளஜெகந் நாத் கோயிலுக்கு சென்று வழிபாடுசெய்தார்.
அது குறித்து, உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கேள்வி எழுப்பி இருந்தார். அவர் கூறுகையில், “ குஜராத் தேர்தல் இரு நல்ல விஷயங்களை செய்து இருக்கிறது. ஒன்று, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எப்படி பேச வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்து இருக்கிறது. 2வதாக, ராகுல் காந்தியை கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய வைத்துள்ளது’’ என்றார்.
