gujarat chief minister and ministry swearing ceremony
குஜராத் மாநில முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். குஜராத் ஆளுநர் ஓம்பிரகாஷ் கோலி, விஜய் ரூபானிக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
அண்மையில் நடந்து முடிந்த குஜராத் மற்றும் இமாச்சல் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. குஜராத் மாநிலத்தில் தொடர்ச்சியாக 6வது முறை பாஜக ஆட்சி அமைக்கிறது.
குஜராத்தில் உள்ள 182 சட்டமன்ற தொகுதிகளில் 99ல் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து குஜராத் மாநில முதல்வராக கடந்த முறை இருந்த விஜய் ரூபானியே மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
குஜராத் தலைநகர் காந்திநகர் தலைமை செயலகத்தில் இன்று பதவியேற்பு விழா நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் 18 மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குஜராத் ஆளுநர் ஓம்பிரகாஷ் கோலி, விஜய் ரூபானிக்கு முதல்வராகவும் நிதின் படேலுக்கு துணை முதல்வராகவும் பதவி பிரமாணம் செய்துவைத்தார். மேலும் 18 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர்.
