gujarat 1st phase elcection commenced

குஜராத் மாநிலத்தில் 89 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. இன்று நடக்கும் தேர்தலில், பாஜக முதலமைச்சர் வேட்பாளர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்

குஜராத்மாநிலசட்டசபையின்பதவிக்காலம்ஜனவரிமாதத்தில்முடிவதையடுத்து, அங்கு தேர்தல்நடத்ததேர்தல்ஆணையம்முடிவுசெய்தது. இமாச்சலப்பிரதேசதேர்தல்தேதிஅறிவிக்கப்பட்டபோதுகுஜராத்மாநிலத்துக்குதேதிஅறிவிக்கப்படவில்லை. மாநிலத்தில்மழைவெள்ளநிவாரணப்பணிகள்நடைபெறவேண்டும்என்பதால்தாமதமாகஅறிவிப்பதாகதேர்தல்ஆணையம்அறிவித்தது.

இதையடுத்து, தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி, கடந்த அக்டோபர் 25-ந்தேதிகுஜராத் தேர்தல் தேதியை அறிவித்தார். டிசம்பர் 9, 14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.

அதன்படி, 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. . இதில் சவுராஷ்டிரா, தெற்கு குஜராத் மண்டலத்தில் இருந்து 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஏறக்குறைய 2.12 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடக்கும். வாக்குப்பதிவுக்காக 22 ஆயிரத்து 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஜூனாகாத், சுரேந்திரநகர்,கட்ச் , மோர்பி, அம்ரேலி, ராஜ்கோட் ஆகியவை முக்கிய மண்டலங்களாகும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து காங்கிரஸ் , பா.ஜனதா கட்சிகள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டன. 22 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா கட்சி 5-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க முயற்சித்து வருகிறது.

பிரதமர் மோடி, பாஜனதா தலைவர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால், இந்த தேர்தலில் தோல்வி அடைந்துவிடக்கூடாது என பா.ஜனதா கட்சி தீவிரமாக பிரசாரம் செய்து வந்தது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க உள்ள நிலையில், இந்த தேர்தல் அந்த கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இந்த தேர்தலில் ராஜ்கோட்(மேற்கு) தொகுதியில் முதலமைச்சர் விஜய் ரூபானி, காங்கிரஸ்,வேட்பாளர் சக்திசின் கோகில்(மன்டவி தொகுதி), அம்ரேலி தொகுதியில் பரேஷ் தனனி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகும்.