gujarat 104 seats BJP and 76 seats for congress
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பேர்தலில் பாஜக 104 இடங்களைப் பெற்று ஆட்சியயைத் தக்க வைத்துக் கொண்டது. கடும் இழுபறிக்கிடையே நடத்த வாக்கு எண்ணிக்கையில் மோடி குரூப் தப்பியது என்றே சொல்ல வேண்டும்.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ம் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிது. முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில், குஜராத் மற்றும் இமாசல பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சி முன்னிலை வகித்தது.
குஜராத்தில் முதலில் பாஜக முன்னிலையில் இருந்துவந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் முன்னிலை பெற்றது. பாஜக – காங்கிரஸ் இடையே கடும் பேட்டி நிலவி வந்தது.

ஆனால் குஜராத்தில் மீண்டும் பாஜக முன்னிலை பெற்றது. தற்போது அங்கு பாஜக 104 இடங்களைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸ் 76 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மிகக் கடுமையாக பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்து வந்த நிலையில் இங்கு பாசுக மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.

கடுமையான போட்டிக்கிடையே மோடி, அமித்ஷா குரூப் அதிர்ஷ்டவசமாக தப்பியது.
இமாசல பிரதேசத்தைப் பொறுத்தவரை தொடக்கத்தில் இருந்தே பாஜக முன்னிலை பெற்று வந்ததது.
அங்கு பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 24 இடங்களிலும் மற்றும் பிற கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதையடுத்து அங்கும் பாஜகவே ஆட்சி அமைக்கிறது.
