கேப்டன் வருண் சிங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 

கேப்டன் வருண் சிங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் வருண்சிங் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். 

இதையும் படிங்க;- AIADMK: என்ன துரோகம்னு அவர்கிட்ட கேளுங்க... கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை.. எடப்பாடியார் ஆவேசம்..!

இதனையடுத்து, வருண்சிங் மீட்கப்பட்டு குன்னூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர், மேல்சிகிச்சைக்காக பெங்களூரு கமாண்டோ மருத்துவமனைக்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தாலும், சீராக உள்ளது என இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். உயிர் காக்கும் கருவிகளுடன் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரை காப்பாற்றும் நோக்கிலே மருத்துவர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கேப்டன் வருண் சிங் உயிரிழந்தார். அவரை மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க;- கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கரமானவர்.. இதை செய்ய முதல்வருக்கு தைரியம் இருக்கா? திமுகவை அலறவிடும் H.ராஜா.!

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் என தன்னைக் குறிப்பிட்டு சசிகலா விடுத்துள்ள இரங்கல் செய்தி குறிப்பில்:- '' 8.12.2021ஆம் தேதி குன்னூரில் ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் கோர விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில், கேப்டன் வருண் சிங் மட்டும் பலத்த காயத்துடன், உயிரோடு மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி தற்போது அவரும் நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன் வருண் சிங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.