Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலின் பாவம் நேத்து வந்தவரு…! நீங்க என்னத்த பண்ண போறீங்க..? அண்ணாமலையை ‘தெறிக்க’விட்ட பாட்டி

ஸ்டாலின் என்ன பண்ணுவாரு பாவம். அவரு நேத்து வந்தவரு. நீங்க இன்னா பண்ணப் போறீங்க அத சொல்லு என்று கேட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பாட்டி ஒருவர் தெறிக்கவிட்டு இருக்கிறார்.

Grandma questions annamalai
Author
Chennai, First Published Nov 10, 2021, 9:35 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சென்னை: ஸ்டாலின் என்ன பண்ணுவாரு பாவம். அவரு நேத்து வந்தவரு. நீங்க இன்னா பண்ணப் போறீங்க அத சொல்லு என்று கேட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பாட்டி ஒருவர் தெறிக்கவிட்டு இருக்கிறார்.

Grandma questions annamalai

மழை பெய்தது… பெய்கிறது… பெய்து கொண்டே இருக்க போகிறது என்று நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் ஆக தமிழகம் முழுவதும் மழையால் நனைந்து வருகிறது. கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேலாக சென்னை, கடலூர், தென்காசி, கோவை என பெரும்பாலான மாவட்டங்களை மழையானது தட்டி காயப்போட்டு வருகிறது.

சென்னையில் கனமழை என்று கூற்று காணாமல் போய்… கனமழைக்கு நடுவே மாட்டிக்கிட்ட சென்னை என்று  கூறுமளவுக்கு எங்கு பார்த்தாலும் மழையும், வெள்ளமுமாக காட்சி அளிக்கிறது.

சென்னையில் வெயில் அடித்தால் உஸ் என்று தண்ணீரை லிட்டர், லிட்டராக பருகும் மக்கள் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கை கண்டு அரண்டு போயிருக்கின்றனர். மழை அறிவிப்பை அடுத்து களத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் நிவாரண பணிகளை முடுக்கிவிட்டு வருகின்றனர்.

Grandma questions annamalai

தினமும் பல பகுதிகளுக்கு நேரடியாக சென்று வெள்ள நிவாரண பணிகளை ஆய்வு செய்து அதிரடி காட்டி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் ஆய்வில் இறங்கி மக்களின் குறைகளை கேட்டு வருகின்றனர். அரசின் குறைகளை சுட்டிக்காட்டி வருகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சென்னையில் கனமழை, வெள்ளத்தில் மக்கள் எப்படி இருக்கின்றனர் என்று கட்சியினருடன் சென்று பார்வையிட்டு திமுகவையும், தமிழக அரசையும் குறை கூறி வருகிறார். 10 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருந்த அதிமுக எடுத்த நடவடிக்கைகளை பற்றி பேசாமல் திமுக எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் அனைத்து விஷயங்களையும் மையப்படுத்தி வருகிறார் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன.

Grandma questions annamalai

அதிலும் குறிப்பாக சென்னை கொளத்தூரில் (முதல்வர் ஸ்டாலின் தொகுதி) என்ன நிலவரம் என்று மக்களிடம் வெளிப்படுத்தினால் திமுகவையும், ஸ்டாலினையும் மக்கள் பிச்சு பிறாண்டி எடுப்பார்கள் நினைத்து அங்கு விசிட் செய்தார்.

அவர் செல்லும் இடங்களில் எல்லாம் வீடியோ எடுக்கும் நபர்களும், செய்தியாளர்களும் சென்று வருகின்றனர். அப்படி அவர் போய் ஆய்வு நடத்திய வீடியோ ஒன்று இணையத்தில் பலத்த கேலிக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாகி உள்ளது.

கொளத்தூர் தொகுதிக்கு விசிட் செய்த அண்ணாமலை, மழையில் கால்களை நனைத்தபடி பாட்டி ஒருவர் தெருவில் நிற்பதை கண்டு நேராக அவரிடம் செல்கிறார். சினிமாவில் ஸ்டார்ட், கேமிரா, ஆக்க்க்க்க்ஷ்ஷஷஷன் என்று அழுத்த டைரக்டர் உச்சரிக்கும் போது நடிகர்கள் தயாராவது போன்று தலையை சரி செய்து கொண்டு பாட்டி ஒருவரிடம் பேசுகிறார்.

Grandma questions annamalai

முதல்வர் தொகுதி எப்படி இருக்குது என்று பாக்க வந்தேங்கம்மா என்று கொங்கு தமிழில் அழகாக அவர் கேட்கிறார். அடுத்த நொடியே அந்த பாட்டி பேசியது தான் இப்போது விஷயமே….

ஸ்டாலின் என்ன பண்ணுவாரு பாவம்… அவரு நேத்து வந்தவரு.. நீங்க இன்னா பண்ண போறீங்க அத சொல்லுங்க என்று சென்னை பாஷையில் பாயிண்ட்டை புடிக்க… பண்ணுவோம்… அதற்கு தானே வந்திருக்கிறோம் என்று பதிலளிக்கிறார்.

இந்த வீடியோதான் இப்போது சக்கபோடு போடுகிறது. மக்களை யதார்த்தமாக சந்தித்து, குறைகளை கண்டு களையும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி வருகிறார் அண்ணாமலை என்று விமர்சனங்கள் வர தவறுது இல்லை. முழுக்க முழுக்க அரசியல்பாணி ஆய்வு என்ற ஒற்றை புள்ளியில் பயணிப்பது என்ன பலனை தரும் என்று கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

Grandma questions annamalai

அண்ணாமலை பேட்டியா..? அண்ணாமலை அறிக்கையா..? கண்டென்ட்டுக்கு தேட வேண்டாம்… கிடைச்சிருச்சு என்று அட்ராசிட்டி காட்டும் டுவிட்டர்வாசிகள் மத்தியில் இந்த வீடியோ சிக்க… காரசாரமான விவாதங்கள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கின்றன……!

ஆக மொத்தம் மழையால் வாழ்வதாரம் இழந்து அழும் மக்களிடம் எதற்கு அரசியல் என்று கருத்துகளும் அண்ணாமலைக்கு எதிராக திரும்பி வருகின்றன.

 

Follow Us:
Download App:
  • android
  • ios