தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க உதவுகின்றன. இவை அனைவராலும் கற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அதற்கென தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. சிறுவர்கள், இளைஞர்கள் என பல தரப்பினரையும் இவ்விளையாட்டுகளுக்கு மவுசு இருக்கத்தான் செய்கிறது. தமிழக அரசு கலைபண்பாட்டு துறையில் சிறுவர்களுக்கு சிலம்பம் பயிற்சி அளித்துவருகின்றார்கள்.


 இராமநாதபுரம் மாவட்டம். ராமேஸ்வரம் அருகே சம்பை கிராமத்தை சேர்ந்த கணபதி முருகேசன். 70 வயதான முதியவர் தனது ஓய்வு நேரத்தில் சிறுவர்களுக்கு இலவச சிலம்ப விளையாட்டு பயிற்சி அளித்து வருகிறார். சிறுவர்களின் தற்காப்புக்காக சிலம்ப பயிற்சி அளித்து வருகிறார்.கட்டிட வேலைக்கு போய் சம்பாதித்து வந்த இவர் கொரோனா தொற்றால் வேலையின்றி இருக்கிறார். தான் கற்ற கலையான சிலம்பத்தை அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு காலை மாலை என இருவேளையும் சிலம்பம் கற்றுக்கொடுத்து வருகிறார். இவரது முயற்சி தற்காப்புகலைகளில் ஒன்றான சிலம்பம் இன்றைய தலைமுறையினருக்கு கற்றுப்கொடுப்பது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து கணபதி முருகேசன் பேசும் போது..
"முழுக்க முழுக்க இலவசமாகவே சிலம்பம் பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கி வருகிறேன்.சிலம்பப் பயிற்சியை கற்றுக்கொள்வதன் மூலம் பாரம்பரிய தற்காப்புக் கலைகள் அழியாமல் பாதுகாக்க முடியும்.அந்த பயிற்சியை  சிறுவர்களுக்கு கற்றுக்கொடுப்பதால் இளம் தலைமுறை கற்றுக்கொண்டு அவர்களுக்கு பின் வரும் அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் இந்த கலை அழியாமல் இருக்கும் என்று நம்புகிறேன். தற்போது ராமேஸ்வரத்தை சேர்ந்த சுமார் 200 சிறுவர்கள் என்னிடம் சிலம்பப் பயிற்சி பெற்று வருகின்றனர்.