நேற்று நடந்த போலீஸ் தடியடியில் வன்முறையாட்டம் ஆடியது போலீசார் தான் ஊடகங்கள் கூட இதில் உண்மையை சொல்லவில்லை, இதை கண்டித்து கண்டன இயக்கம் நடத்த உள்ளோம்.ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையில் விசாரணை குழு அமைக்க உள்ளதாக மக்கள் நலக்கூட்டியக்கம் சார்பில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.

கடற்கரை நோக்கி சென்றோம். ஆர்.கே.சாலையில் காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் அதே நேரத்தில் போராடும் மாணவர்கள் , இளைஞர்களை , பொதுமக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். 

போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி மிருக வதை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். சென்னை கோவை ,மதுரை மூன்று நகரங்களில் போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து மக்கள் நல இயக்கத்தின் சார்பாக கண்டன இயக்கம் நடத்த உள்ளேன்.

கோவையில் திருமாவளவனும், மதுரையில் முத்தரசனும், சென்னையில் நானும் தலைமையேற்று நடத்தும் இந்த கண்டன இயக்கத்தில் மூன்று கட்சிகளின் தொண்டர்களும் கலந்துகொள்வார்கள். 

ஊடகங்கள் கூட காவல்துறையின் அத்துமீறல் குறித்து சொல்லும் போது சமூக விரோதிகள் தான் இந்த வேலையை செய்ததாக கூறியுள்ளனர். ஒருநாள் பொறுத்திருந்தால் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் எல்லாம் சரியாக முடிந்திருக்கும். ஆனால் நேற்று அதிகாலை போலீசார் அமைதியாக போராடியவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நேற்று போலீஸ் கமிஷனர் அளித்த பேட்டியை ஏற்றுகொள்ள முடியாது. போராடியவர்களை வன்முறையாளர்கள் என்கிறார். இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையில் விசாரணை குழு அமைய உள்ளது. அதில் இடம்பெறும் மற்ற உறுப்பினர்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.