தமிழ் பற்றுள்ள குடும்பத்தில் பிறந்து தமிழில் இலக்கிய நடையோடு பேசி அசத்திய தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்ற்அ மூன்று நாட்களுக்குள் தெலுங்கில் பேசி அசத்துகிறார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார் தமிழிசை. தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார். இன்னும் 15 நாட்களுக்குள் தெலுங்கை சரளமாக கற்றுக் கொண்டு மக்களுடன் உரையாட போவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

 

இத்தனை ஆண்டுகள் தமிழில் பெரும் பேச்சுத் திறன், அடுக்குமொழி, இலக்கிய நடை ஆகியவற்றை வெளிப்படுத்தி வந்த தமிழிசை சமீபத்தில் தெலுங்கு அரசு தொலைக்காட்சியில் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது ‘தெலங்கானா ராஷ்டிரிய பிரசலந்தரிக்கு சுபா காஞ்சலு என தெலுங்கில் பேச ஆரம்பித்த அவர் அந்த வீடியோவில் ஆங்காங்கே தெலுங்கில் தொடர்ந்து பேசினார்.

 

இந்த வீடியோவை பார்ப்பவர்கள் தெலுங்கில் ஒலிக்கும் தமிழிசை என அவரை பாராட்டி வருகின்றனர். இனி தெலுங்கிலும் அசத்த போகிறார் தமிழிசை.