நீட் தேர்வு எழுதாத தமிழக மருத்துவர்களை நம்பித்தான் இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து மக்கள் சிகிச்சைக்காக தமிழகத்தை நோக்கி வருகின்றனர். தமிழகத்தில் எந்த குடும்பத்திலிருந்தாலும் அதில் ஒருவராவது மருத்துவராக வேண்டும் எனும் வாய்ப்பை நாம் உருவாக்கி வைத்திருந்தோம். அதன்மீதுதான் சில தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றார். 

நீட் தேர்வு எழுதாத தமிழக மருத்துவர்களை நம்பியே இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காக தமிழகத்தை நோக்கி வருகிறார்கள் என திமுக மகளிர் அணி செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். நீட் தேர்வை தமிழகம் ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றும், அனைவருக்கும் மருத்துவ வசதிகள் கிடைப்பது நீட் தேர்வால் தடைபடுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகியும் அதை ரத்து செய்ய முடியவில்லை. இந்நிலையில் தமிழகத்திற்கு நீட்தேர்வு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டமன்றத்தில் திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. முதல் முறை அனுப்பப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் இரண்டாவது முறையும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது ஆளுநரின் பரிசீலனையில் உள்ள நிலையில் அதன் மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.விரைவில் அனுப்பி வைப்பதாக ஆளுநரும் உறுதியளித்தார். ஆனால் இதுவரையில் அந்த தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் படாமல் இருந்து வருக்கிறது.

நீட் தேர்வில் இருந்து விளக்கு அளிக்கப்பட்டால் தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்கள் அதிகம் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்பதே தமிழக அரசின் வாதமாக உள்ளது. அதற்காகவே இவ்வாறு பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தேசிய அளவில் நீட் என்ற நுழைவுத் தேர்வை நடத்தி அதன் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே மருத்துவர்கள் தரம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதே நீட் தேர்வின் நோக்கம் என மத்திய பாஜக அரசின் கூறி வருகிறது. இந்நிலையில்தான் கனிமொழி நீட் தேர்வு எழுதாத மருத்துவர்களான தமிழக மருத்துவர்களை நம்பித்தான் தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து மக்கள் சிகிச்சைக்காக தமிழகத்தை நோக்கி வருகிறார்கள் என கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், காப்பீட்டு திட்டத்திற்கு தமிழக அரசு 225 கோடி செலவு செய்துள்ளது என்றார், மேலும் அதை விரிவுபடுத்த வேண்டும் எனவும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் அரசு மருத்துமனைகளிலும் கிடைக்க வேண்டுமென்றார். நீட் தேர்வு எழுதாத தமிழக மருத்துவர்களை நம்பித்தான் இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து மக்கள் சிகிச்சைக்காக தமிழகத்தை நோக்கி வருகின்றனர். தமிழகத்தில் எந்த குடும்பத்திலிருந்தாலும் அதில் ஒருவராவது மருத்துவராக வேண்டும் எனும் வாய்ப்பை நாம் உருவாக்கி வைத்திருந்தோம். அதன்மீதுதான் சில தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழ்நாடு அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என முயற்சித்து வருகிறது, அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைப்பதற்கு நீட்தேர்வு தடையாக உள்ளது. நீட் தேர்வு என்பதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், சமூகநீதியை மத்திய அரசு பின்பற்ற வேண்டும், அப்படி பின்பற்ற வில்லை என்றால் அது அரசே இல்லை என்றார். ஆளுநர் தனது சுய காரணங்கள் வழிமுறைகளை எல்லாம் விலக்கி வைத்துவிட்டு நீட் விவகாரத்தில் பொது நோக்குடன் செயல்படவேண்டும். நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

நீட்- ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவாக உறுதியாக இருந்து வருகிறார். நீட் விலக்கு பெறுவது, ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுப்பது என சரியாக செயல் பட்டு வருகிறார். சந்திக்க வேண்டிய நேர்த்தில் சந்திப்பு, கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பு என இருந்து வருகிறார். இந்நிலையில் கனிமொழியும் இந்த விவகார்த்தில் ஆளுநரை எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார் எப்பது குறிப்பிடதக்கது.