ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒரு உயிர் பலி.! ஆளுநர் ரவி தான் முழு பொறுப்பேற்க வேண்டும் -செல்வப் பெருந்தகை

ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிர் பலிகளுக்கும் ஆளுநர் அவர்கள்தான் முழுவதுமாக பொறுப்பேற்க வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Governor Ravi is responsible for the loss of life due to online gambling said Selvaperunthagai

ஆன்லைன் சூதாட்டம் தற்கொலைகள்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சட்டம் இயற்றி அளுநருக்கு அனுப்பி வைக்க்ப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் பல லட்சம் ரூபாயை இழந்த விரக்தியில் அண்ணன் தம்பிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு ஆளுநர் அவர்களே, உயிர்குடிக்கும் ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு உயிர் கொலையில் பறிபோயுள்ளது. இன்று (02.04.2023) துாத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் கிராமத்தில் லாரி டிரைவர் நல்லதம்பி பல லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மியால் இழந்த நிலையில் தனது அண்ணனிடம் 3 லட்சம் கடன் வாங்கி அதையும் இழந்துள்ளார். இதனால், அண்ணன் அவரது தம்பி நல்லதம்பியை அடித்து கொன்றுள்ளார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

Governor Ravi is responsible for the loss of life due to online gambling said Selvaperunthagai

ஆளுநர் தான் முழு பொறுப்பு

தமிழ்நாடு மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாத ஆளுனருக்கு இன்னும் எத்துனை உயிர்கள் ஆன்லைன் ரம்மியால் பறிப்போனபின் கருணை உள்ளம் பிறக்கும்?அரசியல் சட்டத்தையும், தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அரசையும், மாண்புமிக்க சட்டமன்றதையும் மதிக்காத ஆளுநர் தமிழ்நாட்டுக்கு தேவையா? உடனடியாக ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையென்றால் ஒன்றிய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும். ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிர் பலிகளுக்கும் ஆளுநர் அவர்கள்தான் முழுவதுமாக பொறுப்பேற்க வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல்..? மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி- திமுகவை அலறவிட்ட இபிஎஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios