மு.க.ஸ்டாலின் சிறந்த மனிதர்; எனக்கு அவருக்கும் நல்ல நட்பு உள்ளது- ஆர்.என்.ரவி அதிரடி

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தெரிந்தும் நான் எப்படி சட்டப்பேரவையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று கூற முடியும். நான் தமிழக மக்களுக்கு உண்மையை மட்டுமே கூறுவேன் என்று உறுதிமொழி எடுத்திருப்பதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

Governor Ravi has said that he is friendly with Chief Minister Stalin

ஆளுநரும் தமிழக அரசும்

தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ஆளுநர் கல்லூரி நிகழ்வுகளில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பேசுவதாகவும், பாஜகவின் ஊது குழலாக செயல்படுவதாகவும் தமிழக அமைச்சர்கள் மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சிகளும் தெரிவித்து இருந்தன. மேலும் தமிழக சட்டப்பேரவையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்த உரையை படிக்காமல் புதிய வார்த்தைகளை சேர்த்து ஆளுநர் படித்தது மேலும் பிரச்சனையை அதிகரித்தது. இதனையடுத்து ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானத்தையும் தமிழக முதலமைச்சர் கொண்டுவந்திருந்தார். மேலும் ஆளுநர் மாளிகையில் நிதி முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் அமைச்சர் பிடிஆர் குற்றம்சாட்டியிருந்தார்.

விளம்பர பதாகைகள் வைக்க வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும்... அரசுக்கு சசிகலா வலியுறுத்தல்!!

Governor Ravi has said that he is friendly with Chief Minister Stalin

ஆளுநர் மாளிகை நிதி முறைகேடா.?

இதனிடையே தமிழக ஆளுநர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசின் செயல்பாடுகள் தொடர்பாகவும் திராவிட மாடல் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநர் மாளிகை நிதி பற்றி அப்பட்டமாக பொய் கூறியுள்ளார். . அவர் பெட்டி கிரான்ட்டில் விதிமீறல் என்று கூறினார். அந்த பதம் 2000ஆம் ஆண்டே நீக்கப்பட்டுவிட்டது. ஆளுநர் மாளிகை செலவினம் பட்ஜெட்டுக்கு உட்பட்டது. ஆனால் அதற்கென வரம்பு இல்லை என்றே நிதிக் கோட்பாடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என கூறியுள்ளார். மேலும் தமிழக சட்டப்பேரவையில் திராவிட மாடல், சட்டம் ஒழுங்கு குறித்து பேசாதது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை அறிந்தும் நான் எப்படி சட்டப்பேரவையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று கூற முடியும். 

Governor Ravi has said that he is friendly with Chief Minister Stalin

முதலமைச்சர் ஸ்டாலினுடன் நட்பு

நான் தமிழக மக்களுக்கு உண்மையை மட்டுமே உரைப்பேன் என பதவியேற்பின் போது உறுதிமொழி எடுத்திருப்பதாக கூறினார்.  தொடர்ந்து பேசிய அவர், தனிப்பட்ட முறையில் எனக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. ஸ்டாலின் ஒரு நல்ல மனிதர். அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அவரிடம் நானும் என்னிடம் அவரும் பரஸ்பரம் மரியாதையாகவே நடந்து கொள்கிறோம். தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது என ஆளுநர் ரவி தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஆளுநர் மாளிகை நிதி செலவில் முறைகேடா.?அப்பட்டமான பொய்; திராவிட மாடல் காலாவதியானது: இறங்கி அடிக்கும் ஆர்.என்.ரவி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios