Governor must do this

கர்நாடகவில் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில் கூட்டணி மூலம் பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ் மற்றும் மதஜ கட்சியை ஆட்சியை அழைக்க அழைப்பு விடுக்காமல் மாறாக 104 இடங்களை வென்ற பா.ஜ.கவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த்து.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலை மீண்டும் தொடராமல் இருக்க தொங்கு சட்டமன்ற நிலை ஏற்பட்டால் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த ஆளுநருக்கான வழிமுறைகள் வகுக்கப்படவேண்டும் என்பதற்காக காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிக்வி உச்சநீதிமன்றத்தை அணுகவுள்ளது.

ஆளுநர் தேர்தல் முடிந்த்தும் தனிப்பெரும் கட்சியை அழைக்கும்போது அக்கட்சிக்கு போதிய ஆதரவு உள்ளதா என்பதை ஆளுநர் கவனிக்க வேண்டும். அல்லது தேர்வுக்குபின் கூட்டணி மூலம் பெரும்பான்மை பெற்றுள்ளதாக எனக் கவனித்து அவர்களை ஆட்சியமைக்க அழைக்கவேண்டும்.

திருப்தி ஏற்படாவிட்டால் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமைக்கலாம் என பரிந்துரைக்கலாம்.

பெரும்பான்மையை நிரூபிக்க 48 மணிநேரம் மட்டுமே கொடுக்க வேண்டும்.

மேலும் இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்வதிலும் புதிய வழிமுறை தேவையென்றும் மூத்த உறுப்பினரையே சபாநாயகராக நியமிக்க வேண்டும்.

தொங்கு சட்டமன்றத்தின் போது ஆளுநர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளாக இவையாவும் இருக்கவேண்டுமென காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தை கோரப்போகிறது.