நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியான முடிவு அல்ல. குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவப் படிப்பு சேர்க்கையை தமிழக அரசு நடத்தி வந்தது. நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிராக உள்ளதால் பெரும்பாலான தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியான முடிவு அல்ல. குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப்பேரவை முதல்கூட்டத்திலேயே மசோதா நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, திமுக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பான மசோதா கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அன்றே குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், 6 மாதங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி நீட் மசோதாவை தமிழக சட்டப்பேரவை தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். நீட் மசோதா, கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக இருப்பதாகவும், மேலும் பல்வேறு காரணங்களையும் குறிப்பிட்டு, அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படி தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்க தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. இதில், அனைத்து கட்சி கூட்டத்தில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதாவை சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீண்டும் தாக்கல் செய்து பேசி வருகிறார்.

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியான முடிவு அல்ல. குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவப் படிப்பு சேர்க்கையை தமிழக அரசு நடத்தி வந்தது. நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிராக உள்ளதால் பெரும்பாலான தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பயிற்சி மையங்களில் படித்தவர்கள் மட்டுமே வெற்றிபெறும் வகையில் நீட் தேர்வு உள்ளது. பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகே நீட் விலக்கு கொண்டுவரப்பட்டது.
அரசியலமைப்பின் படி ஆளுநர் செயல்படாமல் தன்னிசையான கருத்துகளை கூறியது சரியல்ல. பல முறை தேர்வு எழுவோருக்கு நீட் தேர்வு சாதகமாக உள்ளது. ஆளுநரின் கருத்துகள் உயர்மட்டக்குழுவின் அறிக்கையை அவமானப்படுத்துவது போன்று அமைந்துள்ளது. ஏ.கே.ராஜன் அறிக்கையில் பல்வேறு அனுமானங்கள் உள்ளதாக கூறிய ஆளுநரின் கருத்து தவறானது. உச்சநீதிமன்ற தீர்ப்பைக்கூறி சட்டமே இயற்றக்கூடாது என ஆளுநர் கூறுவது அரசியலமைப்புக்கு எதிரானது.

பலமுறை தேர்வு எழுதுவோருக்கு நீட் தேர்வு சாதமாக உள்ளது. உயர்கல்வி மாணவர் சேர்க்கை அதிகாரம் மத்திய அரசிடம் அடங்காது என உச்சநீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. மாணவர் சேர்க்கை மற்றும் கட்டணம் தொடர்பான விதிகளை மாநில அரசுகளே வகுக்க முடியும் என வழக்கு ஒன்றில் நீதிபதி பானுமதி கூறியுள்ளார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
