Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி.. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி..!


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
 

Governor Banwarilal Purohit test positive
Author
Tamil Nadu, First Published Aug 2, 2020, 5:45 PM IST

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், தீயணைப்புப் படை வீரர்கள், சி.ஆர்.பி.எஃப் ஊழியர்கள் உள்ளிட்ட 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர், ராஜ்பவன் ஊழியர்கள் மேலும் 38 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் ஆளுநருக்கு நெருக்கமாக பணிபுரிந்த ஊழியர்கள். பன்வாரிலால் புரோஹித் அதில், ஒருவர் ஆளுநர் பன்வாரிலாலின் உதவியாளர்.

Governor Banwarilal Purohit test positive

அதில், ஒருவர் ஆளுநர் பன்வாரிலாலின் உதவியாளர். இதையடுத்து, கடந்த 29-ம் தேதி 7 நாட்களுக்கு ஆளுநர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தனிமைப்படுத்திக் கொண்டு 3 நாள்கள் ஆன நிலையில், அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

Governor Banwarilal Purohit test positive

பின்னர், அவருக்கு காலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், ஆளுநர் பன்வாரிலாலுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா தொடர்பாக எந்த அறிகுறி ஏதும் இல்லாததால் ஆளுநரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios