பயிற்சி துவங்கும் போதே மதம் சார்ந்த குறியீடுகள் பொறித்த பின்னரே வேலை தொடங்க வேண்டும் என்று அவர் கூறுவதாகவும் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக இரணியல் போலீசார் கண்ணாட்டுவிலை அரசுப் பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரியில் அரசு பள்ளி ஆசிரியை மதமாற்றத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. அந்நிலையில் போலீசார் அப்பள்ளியில் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே லாவண்யா விவகாரத்தை பாஜகவினர் கையில் எடுத்தது போல இந்த விவகாரத்தையும் கையில் எடுக்க திட்டமிட்டுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு சட்ட திட்டங்கள் அமலுக்கு வந்த வண்ணமுள்ளன. குறிப்பாக இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் குறிவைத்து பாஜக அரசு செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜகவினர் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளியில் மாணவி லாவண்யா என்பவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவர் படித்த பள்ளியில் அவரை மத மாற்றம் செய்ய முயற்சி செய்யப்பட்டதே அவரின் தற்கொலைக்கு காரணம் என பாஜகவினர் குற்றம்சாட்டியதுடன், அது குறித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பாஜக இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளதாக அப்போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதை விமர்சித்து வந்தன. இந்த விவகாரத்தில் மத மாற்றம் ஏதும் நடைபெறவில்லை என போலீஸ் விசாரணையில் பின் தெரியவந்தது. தற்போது அந்த விவகாரம் அடங்கிவிட்டது. ஆனால் அதேபோன்ற ஒரு குற்றச்சாட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே அமைந்துள்ளது கண்ணாட்டுவிலை அரசு மேல்நிலைப்பள்ளியில் தையல் பயிற்சி கற்று கொடுக்கும் ஆசிரியை பியட்றிஸ், இவர் மாணவிகளுக்கு தையல் பயிற்சி கற்று கொடுத்து வருகிறார். பயிற்சியின் போது மதம் சார்ந்த விஷயங்களையும் பேசுவதாக கூறப்படுகிறது.
பயிற்சி துவங்கும் போதே மதம் சார்ந்த குறியீடுகள் பொறித்த பின்னரே வேலை தொடங்க வேண்டும் என்று அவர் கூறுவதாகவும் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக இரணியல் போலீசார் கண்ணாட்டுவிலை அரசுப் பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது இது குறித்த மாணவி ஒருவர் தையல் வகுப்பு எடுக்கும் ஆசிரியை பைபிள் தான் நல்ல புத்தகம் என கூறுகிறார், சில கதைகளை அவர் மேற்கோள் காட்டி பேசுகையில் அதில் இந்துத்துவா சாத்தான் என அவர் கூறுவதாகவும், பயிற்சியின் போது எப்போதும் பிளஸ் சிம்பலைத்தான் தைத்து தருவார் என்றும், மதிய வேளையில் சாப்பிடுவதற்கு முன் கை கோர்த்து பிரேயர் பண்ண சொல்லி அழைக்கிறார் என மாணவி போலீஸிடம் கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த குறிப்பிட்ட ஆசிரியரிடத்தில் போலீசார் விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அடுத்து இந்து அமைப்பினர் அப்பள்ளியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, இதுல இது குறித்து தெரிவித்துள்ள கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, கண்ணாட்டுவிலை பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், அப்படி அதில் ஏதும் உண்மை இருக்கும் பட்சத்தில் சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே லாவண்யா விவகாரத்தில் பாஜக கையில் எடுத்து போராடிய நிலையில் கண்ணாட்டுவிலை அரசு பள்ளி விவகாரத்தையும் கையில் எடுத்து போராட இந்துத்துவா அமைப்புகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
