வெங்காய விலை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஒரு கிலோ ₹100 முதல் ₹150 வரை விற்பனை செய்யப்படுகிறதாம். பொதுவாக வெங்காய விலை உயர்வு அனைத்து மக்களின் கண்களில் கண்ணீர் வரவைக்கும். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் குறிப்பாக பெண்கள் நேரடியாக சமையல் விசயத்தில் தொடர்பில் இருப்பதால் வாக்குகளுக்காக ஆட்சியாளர்கள் அலாரம் அடிப்பார்கள். கடந்த முறை இதே போல் விலை உயர்ந்த போது பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் நடந்தது.மத்தியில் ஒரு முறை ஆட்சியை மாற்றி அமைத்தார்கள் இந்திய மக்கள். ஆகையால் அரசாங்ம் வெங்காயம் விலைஉயர்வு விசயத்தில் ரெட் அலர்ட் போல் எச்சரிக்கையாக நடந்து கொள்ளும். 

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ சென்னையில் அம்மா பண்ணை அவுட்லெட்களில் வெங்காயத்தை ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்கப்படும் திட்டத்தை அறிவித்தார். இந்த விற்பனை சென்னையில் புதன்கிழமையில், இருந்தும் தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளில் வியாழக்கிழமையில் இருந்தும் இந்த திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.