Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவாலும் ஒடுக்க முடியாத அரசு மருத்துவமனைகள்.. புள்ளி விவரத்தை வெளியிட்டு கெத்து காட்டிய விஜயபாஸ்கர்.!

கொரோனா தொற்றினால் இதற்கு முன்னர் தனியார் மருத்துவமனைகளை நோயாளிகள் அணுக இயலாத நிலையில் தனியார் மருத்துவமனைகளின் பளுவையும் அரசு மருத்துவமனைகள் திறம்பட எதிர்கொண்டு அர்பணிப்பு உணர்வுடன் அரசு மருத்துவமனைகளில் சேவைகள் வழங்கப்பட்டதால் புற நேயாளிகள் மற்றும் பிரசவங்களின் எண்ணிக்கை அரசு மருத்துவமனைகளில் உயர்ந்துள்ளன.

Government hospitals that cannot be suppressed by the corona...minister vijayabaskar
Author
Tamil Nadu, First Published Aug 11, 2020, 6:02 PM IST

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இதுவரை அரசு மருத்துவமனைகளில் 5.09 கோடி பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழக முதல்வரின் தலைமையில், உலகளவில் பெருந்தொற்று பரவிய காலத்திலும் தமிழ்நாடு அரசு கொரோனா தொற்று அல்லாத பிற நோயாளிகளுக்கும் தங்கு தடையின்றி சிறப்பான முறையில் சிகிச்சைகளை அளித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்று அல்லாத நோயாளிகளுக்கும் எவ்வித தங்கு தடையின்றி அவசரகால மருத்துவ சேவைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் 24 மணி நேரமும் அளிக்கப்பட்டு வருகிறது.

Government hospitals that cannot be suppressed by the corona...minister vijayabaskar

இந்த வகையில் மார்ச் 2020 முதல் இதுவரை தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 5,92,183 நபர்கள் புறநோயாளிகளாகவும் 27,30,864 நபர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை 1,80,571 பிரசவங்களும் 68,479 சிசேரியன் அறுவை சிகிச்சைகளும் 126 ஒருங்கிணைந்த பேறுகால மற்றும் பச்சிளம் குழந்தை அவசர சிகிச்சை சேவை மையங்களில் (சீமாங்) 1,29,206 பிரசவங்களும் நடைபெற்றுள்ளன. மேலும், பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுகளில் தமிழகம் முழுவதும் 33,374 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

Government hospitals that cannot be suppressed by the corona...minister vijayabaskar

கொரோனா தொற்றினால் இதற்கு முன்னர் தனியார் மருத்துவமனைகளை நோயாளிகள் அணுக இயலாத நிலையில் தனியார் மருத்துவமனைகளின் பளுவையும் அரசு மருத்துவமனைகள் திறம்பட எதிர்கொண்டு அர்பணிப்பு உணர்வுடன் அரசு மருத்துவமனைகளில் சேவைகள் வழங்கப்பட்டதால் புற நேயாளிகள் மற்றும் பிரசவங்களின் எண்ணிக்கை அரசு மருத்துவமனைகளில் உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு, தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் மக்கள் நலன் காக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios