Asianet News TamilAsianet News Tamil

#BREAKING அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட மாபெரும் அறிவிப்பு..!

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59லிருந்து 60ஆக உயர்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

government employees Retirement age raised to 60...CM Edappadi Palanisamy announcement
Author
Chennai, First Published Feb 25, 2021, 12:08 PM IST

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59லிருந்து 60ஆக உயர்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநில அரசின் இடைக்கால பட்ஜெட் கடந்த 23ம் தேதி தாக்கல் செய்த நிலையில், இன்றுமுதல் பட்ஜெட் குறித்து விவாதங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை வழங்கிய அதிமுக அரசு, தற்போது மேலும் பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

government employees Retirement age raised to 60...CM Edappadi Palanisamy announcement

அப்போது 110-வது விதியின்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.  அதில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 60 ஆக உயர்வு என அறிவித்துள்ளார். வரும் மே 31-ம் தேதிக்குள் ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஓய்வு வயது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மே மாதம் 14-ம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு   58-ல் இருந்து 59-ஆக கடந்த மே மாதம் 14-ம் தேதி உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது மேலும் ஒரு வருடம் உயர்த்தப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios