திடீரென ஆய்வு.. கையும் களவுமாக சிக்கிய மருத்துவர் சஸ்பெண்ட்.. அமைச்சர் சுப்பிரமணியன் அதிரடி.!
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். இதனையடுத்து, சாலை மார்கமாக சென்றுக்கொண்டிருந்த போது திடீரென தனது காரை நிறுத்தி வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென ஆய்வை மேற்கொண்டார்.
மதுரை அருகே அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வை மேற்கொண்டார். அப்போது, பணியில் இல்லாத மருத்துவர் பூபேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். இதனையடுத்து, சாலை மார்கமாக சென்றுக்கொண்டிருந்த போது திடீரென தனது காரை நிறுத்தி வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென ஆய்வை மேற்கொண்டார்.
அப்போது, அங்கிருந்த நோயாளிகள் மற்றும் மருந்து வாங்குமிடம், மருத்துவமனை வளாகம் என உள்ளிட்டவை ஆய்வு செய்தார். இதனையடுத்து, மருத்துவர் அறைக்கு சென்ற போது பணி நேரத்தில் மருத்துவர் பூபேஸ்குமார் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மருத்துவர் எப்போதும் 2 மணிநேரம் தாமதமாகத்தான் வருவதாக நோயாளிகள் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, பணி நேரத்தில் பணியில் இல்லாத மருத்துவர் பூபேஸ்குமாரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்குமாறு மதுரை மாவட்ட பொது சுகாதாரதத்துறை இயக்குநருக்கு அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.