திமுக எம்எல்ஏ பஸ்ஸில் அரசு பஸ் டிக்கெட் விநியோகம்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. பெரம்பலூரில் பரபரப்பு..!
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக திமுகவை சேர்ந்த கதிரவன் என்பவர் உள்ளார். இவருக்கு சொந்தமாக தனலட்சுமி சீனிவாசன் ட்ரான்ஸ்போர்ட் என்ற பேருந்து துறையூர் முதல் பெரம்பலூர் இயங்கி வருகிறது.
திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான பேருந்தில் அரசு பேருந்து டிக்கெட் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக திமுகவை சேர்ந்த கதிரவன் என்பவர் உள்ளார். இவருக்கு சொந்தமாக தனலட்சுமி சீனிவாசன் ட்ரான்ஸ்போர்ட் என்ற பேருந்து துறையூர் முதல் பெரம்பலூர் இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம் கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவர் நக்க சேலத்தில் இருந்து பெரம்பலூருக்கு பயணம் செய்தார்.
அப்போது அவர் 17 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். அப்போது டிக்கெட்டின் ஒரு பக்கத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் என்றும் மற்றொரு பக்கத்தில் தனலட்சுமி சீனிவாசன் ட்ரான்ஸ்போர்ட் என்றும் அந்த டிக்கெட்டில் நாள் பயண தேதி உள்ளிட்டவை அச்சிடப்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் சக பயணிகளிடம் கேட்டபோது அனைவருக்குமே இதே போல் தான் டிக்கெட் விநியோகித்து உள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த ராமர் டிக்கெட்டின் இரண்டு பக்கத்தையும் போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகி ஒருவரிடம் விசாரித்த போது அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் பணிமனையில் பணிபுரியும் கண்டக்டர் அல்லது பணியாளர் யாரோ ஒருவர் குறைந்த விலைக்கு டிக்கெட் ரோலையோ அல்லது ஆளுங்கட்சி எம்எல்ஏ என்பதால் அரசு போக்குவரத்துக் கழகத்தில் இலவசமாக வாங்கி இருக்கலாமோ என்ற என்றும் கூறுகின்றனர்.