அரசு பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவரை ஓட்டுநர் செருப்பை கழற்றி அடிக்க பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அரசு பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவரை ஓட்டுநர் செருப்பை கழற்றி அடிக்க பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ஆலங்குளம் நோக்கி அரசு பேருந்தில் 20-க்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். பேருந்து பாதிதூரம் சென்றவுடன் நிறுத்தி இனி இதற்குமேல் பேருந்து செல்லாது. எல்லோரும் இறங்கிக் கொள்ளுங்கள் என ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறங்கிவிடக் கூறியிருக்கிறார். இதனையடுத்து சிலர் இறங்கி உள்ளனர். ஆனால் ஏன் இறங்கச் சொல்கிறீர்கள் எனக் காரணம் கேட்டு பயணிகள் சிலர் இறங்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

உரியகாரணம் சொல்லாமல் அனைவரையும் இறங்கி நடத்து செல்லுமாறு ஓட்டுநர் முப்பிடாதி முத்து கூறியுள்ளார். அப்போது ஒரு பெண் வீடியோ எடுத்து அதில் இந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த ஓட்டுநர் முப்பிடாது முத்து, ஆத்திரத்தில், அந்தப்பெண்ணை செருப்பை கழற்றி அடிக்க முயன்றதோடு ஆபாச வார்த்தைகளை கூறி அந்தப்பெண்ணின் கையை பிடித்து தாக்கத் தொடங்கினார்.

Scroll to load tweet…

இதனைத் தொடர்ந்து பேருந்தில் பரபரப்பு ஏற்பட்டதால் நடத்துனர் வந்து ஓட்டுநர் முப்பிடாதியை சமாதானம் செய்து அழைத்து செல்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனையடுத்து அந்த ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.