ஆளுநர் மாளிகை பாதுகாப்பு அதிகாரியாக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமனம்.. துரை ஐபிஎஸ் மாற்றப்பட்டார் !!

ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டாக்டர் துரை இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தேஷ்முக் சேகர் சஞ்சய்  ஆளுநர் மாளிகையின் புதிய பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் டாக்டர் துரை. இவர் கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில்  நாகை மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய்  ஆளுநர் மாளிகை பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை முதன்மைச் செயலாளர் நிரஞ்சம் மார்டி பிறப்பித்துள்ளார்.