Asianet News Tamil

புது கட்சி தொடங்கும் கவுதமன்... கடுப்பில் அன்புமணி? எப்போ எங்கே?

இன்று சென்னையில் இயக்குனர் கவுதமன் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். எப்போதும்  ஏதாவது ஒரு பிரச்னைகளுக்காக பத்திரிகையாளர்களை சந்திப்பது வழக்கம்தான். ஆனால்  இன்று தனது  புதிய அரசியல் கட்சிக்கான அறிவிப்பை வெளியிட இருக்கிறார். 

Gouthaman Start Political party
Author
Chennai, First Published Nov 11, 2018, 10:36 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கடந்த சில வருடங்களில் நெடுவாசல் போராட்டம், கத்திப்பாரா பாலத்துக்கு பூட்டு என தொடர்ந்து போராட்ட களத்தில்  இருந்த கவுதமன்.  பாமக நிறுவனர் ராமதாஸுடன் நெருக்கமாக இருந்தார். அந்த நேரத்தில்  சந்தனக்காடு  என்ற தொலைக்காட்சி தொடரை இயக்கம் வாய்ப்பை  கொடுத்தார். இதனையடுத்து காடுவெட்டி குரு இறந்த சமயத்தில் அவருக்கு அஞ்சலி  வந்த கவுதமனுடன் பலரும்  செஃல்பி எடுத்திருக்கிறார்கள். இதைப் பார்த்துக் கடுப்பான அன்புமணி, ‘அஞ்சலி செலுத்திட்டு உடனே நீங்க கிளம்புங்க. இறுதி ஊர்வலம் வரை வர வேண்டாம்’  என சொன்னதால் கடுப்பான  கவுதமன்  பாமகவை உடைக்கும் வேலையில் இறங்கியதாக சொல்லப்பட்டது. 

அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த கவுதமன், திடீரென புதிய கட்சி என்ற முடிவுக்கு வந்துவிட்டார். நாளைய பத்திரிகையாளர் சந்திப்பில் புதிய கட்சிக்கான அறிவிப்பை மட்டுமே வெளியிடுவாராம். மற்றபடி கட்சியின் பெயரோ கொடியோ எதுவும் நாளை அறிவிக்கப் போவது இல்லை. கங்கைகொண்ட சோழபுரத்தில் மெகா மாநாடு  நடத்தி கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவிப்பதுதான் கவுதமன் திட்டமாம். அந்த அறிமுக மாநாட்டில், சில ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சில மருத்துவர்கள் என அறிவுசார்ந்த பிரமுகர்களை மேடையில் உட்கார வைத்து தனது பலத்தைக் காட்ட திட்டமிட்டு இருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல், பாமகவில் இருந்தும் அன்புமணி எதிர்ப்பாளர்களை தன் பக்கம் இழுத்து வரவும் திட்டமிட்டு இருக்கிறாராம் கவுதமன்.

கவுதமன் புதிய கட்சி  மேட்டர் உளவுத் துறை மூலமாக முதல்வர் கவனத்திற்கு சென்றதாம்.  அதில் குறிப்பாக, ‘கவுதமன் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவரது கட்சி ஜாதி அடையாளத்துடன் இருக்கக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருக்கிறார் . அதனால் தொடங்கப் போகும் கட்சி என்பது மக்கள் மீதான அடக்குமுறையை தட்டிக் கேட்கும் கட்சி என்ற அடையாளத்துடன் தான் இருக்க வேண்டும் என்பது கவுதமன் பிளானாம்.

கவுதமனின் டார்கெட் கல்லூரி மாணவர்கள்தான். கடந்த 3 மாதங்களாகவே இதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களிடம் பேசி வருகிறார் கவுதமன். கட்சி ஆரம்பித்ததுமே அவரது முதல் அட்டாக் என்பது அரசாங்கத்தை நோக்கித்தான் இருக்குமாம்.  அதே நேரத்தில் அரசுக்கு தொடர்ந்து குடைச்சலை கொடுத்தபடிதான் இருப்பார்..’  என்பதுதான் உளவுத்துறை ரிப்போர்ட் . இதனால் கடுப்பில் உச்சத்திற்கு சென்ற முதல்வர் கவுதமன் மீது நிலுவையில் உள்ள  எல்லா வழக்குகளையும் தூசுதட்டி எடுக்கச் சொல்லியிருக்கிறாராம். அரசியல் கட்சி மாநாடு   தொடங்குவதற்கும் ஏதாவது ஒரு வழக்கில் கம்பி எண்ணப்போவது உறுதி என நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios