இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 28 ஆயிரத்து 848 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது, இதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் 30 ஆயிரத்தையும் தாண்டி விற்பனையாகி வருகிறது.

 

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை அதனைத் தொடர்ந்து பணமதிப்பு சரிவு , அதன் எதிரொலியாக தங்கத்தின் விலை உயர்வு என அடுக்கடுக்கான மாற்றங்கள் ஏற்பட்டு, வரலாறு காணாத அளவிற்கு தங்கத்தின் விலை தாறுமாறாக  உயர்ந்து வருகிறது. நூறு,  இருநூறு என படிப்படியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் திடீரென பன்மடங்காக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.  இதேபோல் வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால்  மத்திய அரசு எடுத்த சில சீர்திருத்த  நடவடிக்கைகள் மூலம்,  இடையில் படிப்படியாக தங்கத்தின் விலை குறைய ஆரம்பித்தது, நேற்று மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 28 ஆயிரத்து 448 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில்  இன்றுசவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது தங்கத்தின் விலை ஏறுமுகத்தில்  இருந்ததால் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று 28 ஆயிரத்து 848 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது.  ஒரு கிராம் தங்கத்தின் மீது 50 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.  ஒரு கிராம் 3,606 ரூபாயாக உள்ளது. இதேபோல் 24 கேரட் தங்கம் 30 ஆயிரத்தை தாண்டி 30ஆயிரத்து 104 ரூபாய்க்கும்,  ஒரு கிராம் 3 ஆயிரத்து 763 ரூபாய்க்கும் விற்பனையானது.  ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று காலை நிலவரப்படி கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 48 ஆயிரத்து  200க்கு விற்கப்படுகிறது ஒரு கிராம் 48 ரூபாய் 20 காசுகளாக உள்ளது.