இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் மற்ற நாடுகளைப் போல  வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்படலாமென இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர்கள்  சங்கத்தின் தலைவரும் மற்றும் பத்ம ஸ்ரீ விருது பெற்ற மருத்துவருமான டாக்டர் ரகுராம்,  கருத்து தெரிவித்துள்ளார் .  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கட்டுரை :-  1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 400 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பலரின் மனதிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியா உண்மைத் தகவலை மறைக்கிறதோ.?  என்பதுதான் அது .   சில நாட்களுக்கு முன்பு முன்னர் கொரோனா சோதனைக்கு பல பழமையான முறைகள்  கடைப்பிடிக்கப்பட்டன .  கடந்த  14 நாட்களில் பயண வரலாற்றைக் கொண்டவர்கள் மற்றும் வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே பரிசோதிக்கப்பட்டனர். 

தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்த சோதனையின் அளவுகோலை சற்று  நீட்டித்துள்ளது . ஆதாவது  எந்த பயண வரலாற்றுப் பின்னணியும் இல்லாமல் மருத்துவமனையில் காய்ச்சலுடன் சுவாசப் பிரச்சனையால் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் பரிசோதிக்கின்றனர்.  அதேபோல் 111 ஐ சி எம்ஆர் அங்கிகாரம் பெற்றஆய்வகங்களுக்கு மேலதிகமாக, ஆறு தனியார் ஆய்வகங்கள் நிகழ்நேர பி.சி.ஆர் அடிப்படையிலான கோவிட் 19 சோதனையை மேற்கொள்ள இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளன.  இது சமூக பரவலில் அளவை கணிக்க வாய்ப்பாக அமையும் .  முதலில் துள்ளியமான நோயறிதல் நோயுற்றவர்களை துல்லியமாக அடையாளம் காணமுடியும் ,  அதன் மூலம் அவர்களுக்கு  துல்லியமான சிகிச்சை வழங்க முடியும் முறையான சோதனை நோயின் பரிமாணத்தை மதிப்பிடுவதற்கு வைரசை கட்டுப்படுத்துவதற்கான நமது முயற்சிகளை வலுப்படுத்துவதற்கு உதவும் . தற்போது சமூக பரவலை தடுக்கும் நோக்கில் இந்தியாவில் சுமார் 16,000 பேரை பரிசோதித்து உள்ளது . ஆனால் தமிழ்நாட்டிற்கு சமமான மக்கள் தொகையைக் கொண்ட தென் கொரியா ஒவ்வொரு நாளும் 12,000 முதல் 15,000 பேரை சோதிக்கிறது . 

தென் கொரியா சிங்கப்பூர் ஹாங்காங் தைவான் சீனா போன்ற நாடுகளில் ஒரு பெரிய அளவில் விடாமுயற்சியுடன் சோதித்து வருகிறது குறிப்பாக வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 5% பேருக்கு ஐசியு பராமரிப்பு தேவைப்படும்,  இந்தியாவின் மக்கள் தொகையை கணக்கிட்டுப் பார்த்தால் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவமனை படுக்கை கூட இல்லை ,  இந்தியாவிலுள்ள ஐசியு படுக்கைகள் மிக மிக சொற்பமாகவே உள்ளது ,  கடவுள் தான் நோய் தொற்றின் தீவிரத்தை தடுத்து வைத்திருக்கிறார் என்று சொல்லவேண்டும் .  சமூக பரிமாற்றத்தால் ஏற்படும்  வைரஸ் சமூக பரவல் தொற்று நோயாக மாறினாள் ,  இந்தியா சந்திக்கும் பேரழிவு சமாளிக்க முடியாத அளவில் இருக்கும் .  வைரசின் அதிவேக பரவலை இந்தியாவில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன என்பது அடுத்த இரண்டு வாரங்களில் தெரியும் இதில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நம் சக்தியால் முடிந்த அளவிற்கு நாம் போராட வேண்டும் .  என தன் கட்டுரையில் விளக்கமாக கூறியுள்ளார்.