தேவர் ஜெயந்தியை முன்னிட்டு  ராமநாதபுரம், பசும்பொன் வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் கோபேக் ஸ்டாலின் என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.  

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின்113வது குருபூஜை இன்று நடைபெறுகிறது. அவருக்கு புகழஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில், GoBackStalin என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

 

’’இந்துக்களுக்கும் இந்தியாவுக்கு எதிரான தீய சக்தியான திமுகவுக்கு எதிராக மக்கள் குரல் அதுவும் சொந்த மாநிலத்தில் எழுந்துள்ளது. ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உயிர் மூச்சாக கருதிய தேசியம்  தெய்வீகம் இரண்டையும்  இழிவுபடுத்திய நீங்கள்’’ என்றும், ’’பசும்பொன் மண்ணை கூட மிதிக்க அருகதை அற்றவர்.! தேசியமும் தெய்வீகமும் பேசிய பசும்பொன் தேவர் அய்யா பூமியில் உங்களுக்கு என்ன வேலை?’’ எனவும் கேள்வி எழுப்புகின்றனர். 

 

’’கடவுள் எங்கேயிருக்கிறார் என்ற நாத்திகவாதிகளுக்கு, உடலில் உயிர் எங்கேயிருக்கிறது என செருப்படி கேள்வியையே பதிலாக தந்தவர் தெய்வீகத்திருமகன் தேவர். அந்த புனிதமான மண்ணை களங்கப்படுத்தாதே. இந்து திருமணங்களை கொச்சைப்படுத்தி, கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக விமர்சித்த கருப்பர் கூட்டத்தை ஆதரித்த ஸ்டாலினே’’ எனவும் எதிர்ப்புக் காட்டுகின்றனர். 

 

’’பசும்பொன் ஆன்மீக செம்மல் பசும்பொன் தேவர் திருமகனார் புனித பூமிக்கு போகாதே !!! தென் தமிழகம் இந்துகலச்சாரத்தின் தலைநகரம். சிறுபான்மையினரின் ஓட்டுக்காக பெரும்பான்மை இந்துக்களை பொதுஇடங்களில் கேவலப்படுத்தும் நாத்திக ஸ்டாலின் உனக்கு பசும்பொன்னில் இடமில்லை. இந்துப் பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று திருமாவைச் சொல்லச் சொல்லி இந்து பெண்டிரை அவமதித்த ஸ்டாலின் பசும்பொன்னுக்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை’’ எனவும் கடும் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். 

 

மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அவருக்கு எதிராக கோபேக்மோடி என்கிற ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கிய திமுக கூட்டணி தற்போது தமிழகத்திற்குள்ளேயே கோபேக்ஸ்டாலின் என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாவதால் அதிர்ச்சி அடைந்து கிடக்கிறது அறிவாலய வட்டாரம்.