மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் 3 நாள் பயணமாக கோவா சென்றுள்ளார்.

இந்தியாவில் உள்ள விடுமுறை தினத்தை கழிக்கும் முக்கிய சுற்றுலா தளங்களில் முதன்மையானது கோவா. இந்தியா மட்டும் இன்றி வெளிநாட்டினரும் விடுமுறையை கழிக்க கோவாவில் குவிவதில் வழக்கம். கோவா என்றாலே குளு குளு பிரதேசம் தான். திரும்பிய பக்கம் எல்லாம் கடற்கரை, அரைகுறை ஆடையில் பெண்கள், சரக்கு என்று ஒரே குதூகலமான பகுதி.

இங்கு தான் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று இரவு புறப்பட்டுச் சென்றுள்ளார். வரும் ஞாயிறு வரை அமைச்சர் ஜெயக்குமார் அங்கு இருக்க உள்ளார். திடீரென அமைச்சர் ஜெயக்குமார் கோவா சென்று இருப்பது அரசுப் பணிகளுக்காகத்தான் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளவது. வழக்கமாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெறும்.

ஆனால் இந்த முறை கோவாவில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதில் பங்கேற்கவே அமைச்சர் ஜெயக்குமார் அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பொதுவாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் என்றால் மாநில நிதி அமைச்சர்கள் தான் கலந்து கொள்வார்கள். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை நிதித்துறை பொறுப்பை வகிக்கும் ஓபிஎஸ் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.

இதனால் தான் கோவாவிற்கு அமைச்சர் ஜெயக்குமார் சென்றுள்ளார். ஜெயக்குமார் எப்போதுமே ஒரு ஜாலிப் பேர்வழி. அதனால் கோவாவிலும் அது போல் ஏதாவது சம்பவத்தை அவர்அரங்கேற்றுவார் என எதிர்பார்க்கலாம்.