முககவசம் தனி மனிதஇடைவெளி இருந்தால் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து அதிகப்படியான அளவிற்கு உயிர் தப்பிக்க முடியும் என்று உலக சுகாதாரநிறுவனம் உலக நாடுகளுக்கு அட்வைஸ் செய்திருக்கிறது. மாஸ் அணிவது கட்டாயம் அணியாவிட்டால் ஆறுமாதம் சிறை தண்டனையெல்லாம் போடுவதாக மிரட்டும் மாவட்ட ஆட்சியர்கள்.ஹெல்மெட் போடாவிட்டால் அபராதம் விதித்தது போலீஸ். இதனால் தரமில்லாத ஹெல்மெட் சாலைகளில் கூவி கூவி விற்பனை செய்யப்பட்டது.இன்னும் அந்த விற்பனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதே போன்று தரமில்லாத மாஸ்க் சாலைகளிலும் தெருக்களிலும் ஏன்? பெட்டிக்கடைகளிலும் கிடைக்க தொடங்கியிருக்கிறது. அந்த மாஸ்க் எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்று எந்த அதிகாரியும் ஆய்வு செய்வதில்லை. த்ரிலேயர் மாஸ்க் அணிவது தான் பாதுகாப்பானது என்று சொல்லும் அதிகாரிகள் யாராவது தரமற்ற மாஸ்க் விற்பனை செய்வர்களை பிடித்திருக்கிறார்களா?இல்லை.


உலகமே கொரோனா பேரிடரில் சிக்கி இருக்கும் போது இவ்வளவு உயிர்களை இழந்த பிறகும் பாதுகாப்பான மாஸ்க் வழங்க மக்களை காக்கின்ற அரசாங்கம் முன் வராதது வேதனையான ஒன்று. மக்களை ஓடவிட்டு ஓடவிட்டு அடித்து துவைக்கிறது அரசு. ரூ5 க்கு த்ரிலேயர் மாஸ்க் விற்பனை செய்தவர்கள் ரூ16க்கு விற்பனை செய்கிறார்கள் இதையெல்லாம் அரசாங்கம் கட்டுப்படுத்துவது இல்லை.என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இந்த நிலையில் தான் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக் கவசம் திங்கள்கிழமை முதல் வழங்கப்பட உள்ளது என்று தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 

 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக் கவசம் திங்கள்கிழமை  முதல் வழங்கப்பட இருப்பதாக  தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்  மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டியில் ஊராட்சி மன்ற புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். அதன்பிறகு அங்கு நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை அவர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்.... "கொரோனா தொற்று பாதிப்பைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதற்காக, கொரோனா பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன.கொரோனா தொற்று பாதிப்புக்கான தடுப்பு மருந்துகள் கிடைக்கும் வரை, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே முகக் கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக் கவசம் வழங்குவதை தமிழக முதல்வர் திங்கள்கிழமை தொடங்கி வைக்க இருக்கிறார்.