மதுரை வருகை தரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு வரவேற்றும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை வருகை தரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு வரவேற்றும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை தோப்பூரில் நடைபெறும் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி வந்துள்ளார். மதுரை வரும் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டப்படும் என கூறிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை வரவேற்று பாஜக தரப்பில் ஆதரவு போஸ்டர்கள் மதுரையில் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கருப்பு கொடி- பலூன்களை வைத்து வைகோ தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இது ஒரு புறம் இருக்க சமூகவலைதளங்களிலும் மோடி வருகைக்கு எதிர்ப்பலைகள் வீசி வருகிறது. இந்நிலையில் மோடியை எதிர்க்க வருகை தரும் வைகோவை வரவேற்று வித்தியாசமான முறையில் பாஜகவினர் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டர்களில் கறுப்புக் கொடி காட்ட வருகை தரும் வைகோ அவர்களை பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பில் வரவேற்கிறோம்.
உங்களை வரவேற்று வழியனுப்ப பாஜக இளைஞரணி வழி மீது விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மதுரை அதகளப்பட்டு வருகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 27, 2019, 11:59 AM IST