இடைதேர்தலில் போட்டியிடுவது குறித்து இரண்டு நாளில் அறிவிப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் ஜி கே வாசன் பேசியதாவது.
Add Asianetnews Tamil as a Preferred Source

தமிழகத்தில் மூன்று தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மூன்று தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் நிலைபாடு குறித்து வரும் திங்கள்கிழமை அதிகார பூர்வமாக அறிவிக்கபடும்.பொதுவாக இடை தேர்தல்களில் தமிழ் மாநில காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை.பணம் பலம், ஆட்சி பலம்,அதிகார பலம் உள்ளவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்.
நீதிமன்ற தீர்ப்புக்கு பின் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் வரவேண்டும் என்பதில் எந்த மாற்றுகருத்தும் கிடையாது பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்யாது என நான் நம்புகிறேன் என்று கூறினார்
