ஹிந்து விரோத போக்கை கைவிடுங்க.. திமுக அரசுக்கு எதிராக கொதிக்கும் நாராயணன் திருப்பதி.!

 ஹிந்து சமய அறநிலைய துறை அத்து மீறி, சட்ட விரோதமாக தன் வசப்படுத்திக்கொண்டதோடு, இது குறித்து கேள்வி எழுப்பிய பக்தர்களை குறிப்பாக பெண்களை தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Give up the anti-Hindu tendency...narayanan thirupathy against DMK government

ஹிந்து சமய அறநிலைய துறை அத்து மீறி, சட்ட விரோதமாக தன் வசப்படுத்திக்கொண்டதோடு, இது குறித்து கேள்வி எழுப்பிய பக்தர்களை குறிப்பாக பெண்களை தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய கோவிலில் பக்தர்களுக்கான  ஆலய முன்னேற்ற  அலுவலகம் பல நூற்றாண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2004ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு அப்போதிருந்த அதிகாரிகளாலேயே திறந்து வைக்கப்பட்டு பக்தர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், ஹிந்து சமய அறநிலைய துறை அத்து மீறி, சட்ட விரோதமாக தன் வசப்படுத்திக்கொண்டதோடு, இது குறித்து கேள்வி எழுப்பிய பக்தர்களை குறிப்பாக பெண்களை தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

Give up the anti-Hindu tendency...narayanan thirupathy against DMK government

இதில் ஒரு பெண்மணி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதை கண்டித்த பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட பல்வேறு பாஜக நிர்வாகிகளை கைது செய்துள்ளது காவல்துறை. தொடர்ந்து  ஃ பாசிச, அதிகாரவர்க்க, அடக்குமுறை ஆட்சியை நடத்தும் திமுக அரசின் செயல் சட்ட விரோதமானது மட்டுமல்ல ஜனநாயக விரோதமானதும் கூட. உடனடியாக படுகாயமடைந்துள்ள அந்த பெண்மணிக்கு உரிய மருத்துவத்தையும், இழப்பீட்டையும் அளிப்பதோடு, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பாஜகவினரையும் விடுதலை செய்ய வேண்டும். 

Give up the anti-Hindu tendency...narayanan thirupathy against DMK government

அராஜக போக்கோடு இந்த விவகாரத்தை கையாண்ட ஹிந்து அறநிலைய துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பூட்டப்பட்ட  பக்தர்களின் சஷ்டி மண்டபம் மீண்டும்  பக்தர்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட வேண்டும். திமுக அரசின் தொடரும் ஹிந்து விரோத போக்கை கைவிட வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios