தரங்கெட்ட ஆட்சிக்கு இந்த சம்பவமே சாட்சி... எடப்பாடியை ஏடாகூடமாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்..!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் வன்முறையாகவும் பல இடங்களில் வெடித்தது. இதனால். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். வன்முறை சம்பவங்களில் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், சென்னை பெசன்ட்நகர் பகுதியில் மாணவியர் சிலர் கோலம் வரைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

girl student arrest...mk stalin condemns aiadmk government

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைக் கூட பயன்படுத்தத் தடைவிதிக்கும் தரங்கெட்ட ஆட்சிக்கு இதுவே சாட்சி என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் வன்முறையாகவும் பல இடங்களில் வெடித்தது. இதனால். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். வன்முறை சம்பவங்களில் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், சென்னை பெசன்ட்நகர் பகுதியில் மாணவியர் சிலர் கோலம் வரைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

girl student arrest...mk stalin condemns aiadmk government

இதுதொடர்பாக தகவலறிந்து அங்கு வந்த அடையாறு சாஸ்திரி நகர் போலீசார் கோலம் வரைவதற்கு அனுமதி மறுத்தனர். ஆனாலும், சில மாணவிகள் அந்த இடத்தில் இருந்து நகரவில்லை. இதையடுத்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியரை கைது செய்து வேனில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கைதுக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, போலீசார் அவர்களை விடுவித்தனர். இதுகுறித்து, குடியுரிமை சட்டத்தைக் கண்டித்து கோலம் போட்டு எதிர்ப்பை தெரிவித்த மாணவர்களை கைது செய்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

girl student arrest...mk stalin condemns aiadmk government

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,  "அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதற்கு இது மேலும் ஓர் உதாரணம். சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த 6 பேரை எடப்பாடியின் காவல்துறை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

girl student arrest...mk stalin condemns aiadmk government

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைக் கூட பயன்படுத்தத் தடைவிதிக்கும் தரங்கெட்ட ஆட்சி இது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்கள் மீதான வழக்கும் திரும்பப் பெறப்பட வேண்டும். மேலும், மனித உரிமைகளை மண்புழு அரசு மதிக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios