ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி எம்எல்ஏ ஈஸ்வரன், 43.  இவருக்கும், சந்தியா என்ற 23 வயது பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சந்தியா திடீரென காணாமல் போனார். சந்தியா எம்.சி.ஏ. படித்துள்ளார்.  வருகிற 12-ந் தேதி சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலிலேயே திருமணத்தை நடத்தலாம் எனவும் முடிவு செய்யப்பட்டு, அதற்காக இரு வீட்டாரும் பத்திரிகைகளை ஊர்முழுக்க கொடுத்து வந்தனர்.

ஆனால், அதற்கு முன்பாக கடந்த 1ஆம் தேதி, சந்தியாவை திடீரென காணவில்லை. இதுகுறித்து பெண்ணின் தந்தை ரத்தினசாமி புகார் தெரிவித்தார். கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் தேடியும் சந்தியா கிடைக்கவில்லை. இதனையடுத்து சந்தியாவின் தாயார், கடத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சந்தியாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், அவருடன் சந்தியா சென்றிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

மணப்பெண் ஓடிப்போனதால் சோகத்தில் இருந்த எம்.எல்.ஏ. ஈஸ்வரனின் உறவினர்கள், ஏற்கனவே குறித்த தேதியில் திருமணத்தை நடத்துவதில் உறுதியாக இருந்தனர். அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, தப்பியோடிய சந்தியா, மணப்பாறை அருகே பிடிபட்டார். அவரை கடத்தூர் காவல்நிலையத்திற்க்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். அதன்பின், கோபிச்செட்டிபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில், சந்தியா ஆஜர்ப்படுத்தப்பட்டார்.