பிபின் ராவத்தின் மரணத்திற்கு வழிவகுத்த ஹெலிகாப்டர் விபத்துக்கு விமானியின் தவறு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் மரணத்திற்கு வழிவகுத்த ஹெலிகாப்டர் விபத்துக்கு விமானியின் தவறு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் 12 ஆயுதப்படை வீரர்களை ஏற்றிச் சென்ற Mi-17V5 ஹெலிகாப்டர் - தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்றபோது விழுந்து விபத்துக்குள்ளனது
.
விமானியின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, ஹெலிகாப்டருக்கு தேவையான அனைத்து நவீன வசதிகள் இருந்தும் கவனக்குறைவாக இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் கருத்துப்படி, அந்த ஹெலிகாப்டர், நிலப்பரப்பு, நீர் அல்லது வேறு தடைகள் இருந்தாலும் மோதல்கள் கட்டுப்பாட்டை இழக்கும் அறிகுறியை முன்பே காட்டி விடும்.
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் இது குறித்து கூறுகையில், ’’ஒரு விமானம் நேர்மறையான கட்டுப்பாட்டில் இருக்கும் போது நிலப்பரப்பில் (தரை, மலை, நீர்நிலை அல்லது வேறு தடைகள்) தற்செயலாக விபத்து நடக்கும். இதுபோன்ற சம்பவங்களில் முக்கியமான வேறுபாடு என்னவென்றால், அந்த ஹெலிகாப்டர் விமானக் குழுவினரின் கட்டுப்பாட்டில் இருக்கும். மேகமூட்டமான வானிலையில் விபத்து நடந்ததாக ஆதாரங்கள் தெரிவித்தன. ஆனால், அந்த ஹெலிகாப்டர் மிகவும் பாதுகாப்பானது. விபத்து நடந்த நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் செயலிழக்கவில்லை.
டிசம்பர் 8-ம் தேதி தமிழகத்தின் நீலகிரி மலையில் நடந்த விபத்து குறித்து விசாரிக்க, நாட்டின் தலைசிறந்த ஹெலிகாப்டர் பைலட் ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையிலான முப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த விபத்தில் ஜெனரல் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் உயிரிழந்தனர்.

குன்னூர் மலைப்பகுதியில் திடீரென தோன்றிய அடர்ந்த மேக மூட்டத்தில் ஹெலிகாப்டர் பறப்பதை செல்போன் வீடியோக்கள் காட்டின. ஹெலிகாப்டர் குறைந்த உயரத்தில் பறந்து கொண்டிருந்ததாகவும், மேக மூட்டத்திலிருந்து வெளியே பறக்க முயற்சித்த போது விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ஜெனரல் ராவத் ராணுவ பயிற்சி முகாமில் மாணவர்களிடம் உரை நிகழ்த்த சென்று கொண்டு இருக்கும்போது அந்த விபத்து நடந்தது.
