Geeyar said blessing Vijayakanth
ஸ்ரீவில்லிவுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நேரில் செந்திதது ஆசிர்வாதம் வழங்கினார். நீங்கள் நினைத்தது எல்லாம் விரைவில் நடக்கும் என்று விஜயகாந்தை அவர் ஆசிர்வாதம் செய்தார்.
கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து தனது கட்டுரையில் கூறியிருந்தது பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. அதற்கு கவிஞர் வைரமுத்து, வருத்தம், தெரிவித்திருந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்திருந்தார். ஆனால், திடீரென ஜீயர், தனது உண்ணாவிரதத்தை திடீரென கைவிட்டார். உண்ணாவிரத போராட்டத்தைக் கைவிட்ட ஜீயர், வைரமுத்துவுக்க எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் பின்று தான் கூறியதற்கு, ஆண்டாள் காலில் சாஸ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்டதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த ஜீயர், ஆனால், வைரமுத்துக்கு கொடுத்த கெடு முடிந்தும், அவர் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கவில்லை.
இந்த நிலையில், ஜீயர், திடீரென தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்தார். விஜயகாந்தை சந்தித்த ஜீயர், அவருக்கு ஆசீர்வாதம் வழங்கினார். தேமுதிக தலைமை அலுவலகம் வந்த ஜீயர், விஜயகாந்தை ஆசிர்வாதம் செய்து நீங்கள் நினைத்தது எல்லாம் விரைவில் நடக்கும் என்று கூறியுள்ளார்.
